டெங்கு நோய்க்கு என்ன சிகிச்சை?

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 413

சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவியதைக் கண்டு மேயர் சைதை துரைசாமி அதிகம் கவலைப்பட்டார். டெங்கு காய்ச்சலை விட, அந்த காய்ச்சல் பற்றிய அச்சம் மக்களை அதிகம் தொற்றிக்கொண்டது.

டெங்கு காய்ச்சல் பற்றியும், அதன் பரவல் குறித்தும் முழுமைமையாக ஆய்வு நடத்தினார் மேயர் சைதை துரைசாமி. டெங்கு நோய்க்குக் காரணமாக இருப்பது கொசுக்கள், அதுவும் பெண் கொசுக்கள் மட்டும்தான்.

பொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும். ஆனால், டெங்குக் கொசுக்கள் இவற்றிலிருந்து வித்தியாசமாக சுத்தமான நீர்நிலைகளில் வளரக்கூடியவை. இந்த கொசுக்கள் பெரும்பாலும் மாலை அல்லது பகல் நேரத்திலே மனிதர்களைக் கடிக்கின்றன.

கொசு கடித்த எல்லோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் என்றாலும், பெரும்பாலான நபர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் குணமாகத் தொடங்கிவிடும். அதனால் அவர்களுக்கு டெங்கு நோய் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.

ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதாவது, டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழிக்கும் பணியில் வேகம் எடுக்கும். ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும்.

இந்த நிலையில் உடனடியாக தட்டணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதில் கொஞ்சம் அலட்சியம் காட்டினாலும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த நோயின் அச்சுறுத்தலை அறிந்துகொண்ட மேயர் சைதை துரைசாமி, இது குறித்து ஆங்கில மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தான் ஆங்கில மருத்துவர்கள் டெங்கு நோய் மருத்துவம் குறித்து அதிர்ச்சிகரமான ஒரு தகவலைக் கூறினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment