வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்
கடைக்காரர் : இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை 10 ரூபாய்
கஸ்டமர் : லூசுன்னா எவ்ளோ?
கடைக்காரர் : எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.
……………………….
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : இப்பவாது உனக்கு அக்கறை வந்திச்சே, எந்த துறையில சாதிக்க போற..
…
மகள் : நான் எதிர் வீட்டுப்பையன் சாதிக்கை விரும்பறேம்ப்பா
…………………..
அவன் : செக்யூரிட்டி வேலை கேக்கறியே… உனக்கு என்ன தகுதி இருக்கு..?
இவன்: சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!
……………………..
பேசும் நாய்
பேசும் நாய் விற்பனைக்கு’ என, ஒரு வீட்டு வாசலில் எழுதியிருந்தது.
ஆச்சரியமடைந்த ஒருவர், உள்ளே சென்று, ‘உங்க நாயுடன் பேசலாமா…’ என, கேட்டார்.
‘ஆஹா…’ என்றார், வீட்டுக்காரர்.
‘நீ… உன் வாழ்க்கையில் செய்த சாதனைகளை சொல்?’
‘எங்க தெருவில் பல மாடி கட்டடம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள், அது இடிந்து விழுந்து, பலர் சிக்கிக் கொண்டனர். உடனே அங்கு சென்று, மோப்பம் பிடித்து, பலரை காப்பாற்றினேன்!’
‘பிறகு…’
‘ஒரு சமயம், என் முதலாளியின் மனைவியிடம், ஒரு திருடன் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகைகளை பறித்துக் ஓடினான். உடனே, அவனை துரத்திச் சென்று, கவ்வி, பறித்த நகை, பணத்தை கீழே போடச் சொன்னேன்!’
திகைத்தவர், வீட்டுக்காரரிடம், ‘பிறகு ஏன் சார், இந்த நாயை விற்கறீங்க?’
‘அது, வாயை திறந்தாலே பொய்… உங்ககிட்ட கூறின எதுவும் நடக்கவேயில்லை; போதுமா…’ என்றார், வீட்டுக்காரர்.












