சும்மா சிரிங்கப்பூ
தீபாவளி நேரம் மட்டுமல்ல, எல்லா நேரங்களில் வெடி ஜோக்ஸ் குபீர் சிரிப்பை வரவழைக்கவே செய்யும்.
என்னங்க, இவ்வளவு பெரிய கம்பி மத்தாப்பா இருக்குது…
இந்த மத்தாப்பை நீங்க வெடிச்சு முடிச்சவுடனே, கம்பிகளைக் கட்டட வேலைக்குப் பயன்படுத்திக்கலாம்.
……….
கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயங்கர சத்தத்தோட வெடிச்சதே,
அந்த வெடி ஒண்ணு கொடுங்க.. .
யோவ், விளையாடுறியா… அப்ப வெடிச்சது என் வண்டியோட டயர்.
………………
மனைவி: என்னங்க… எனக்கு தீபாவளிக்கு டல் கலர்லேயும் வேலைக்காரிக்கு நல்லா பிரைட் கலர்லேயும் புடவை வாங்கியிருக்கீங்க…
கணவன் : நீ எது குடுத்தாலும் கட்டிக்கிறே… ஆனா, அவ அப்படியில்லை, பிரைட் கலர்தான் வேணும்னு கேட்கிறாளே
……………..
அவள் ; நீ மத்தாப்பு மாதிரி சிரிக்கிறேன்னு உன் லவ்வர் சொன்னானே, இப்ப உங்க காதல் என்ன நிலையில இருக்கு..?
இவள் : புஸ்வாணமா போச்சுடி.
………………………
இவன் : எப்புடிடா உனக்கு தீக்காயம் ஏற்பட்டது ?
அவன் : ஒருத்தன் வெடிக்கலைன்னு அணுகுண்டை விட்டுட்டுப் போயிட்டான். அதை நைசா எடுத்து பைக்குள்ள போட்டேன், வெடிச்சிடுச்சு.