மருந்தில்லாத மருந்து
மருந்தே இல்லாத ஒன்று மருந்தாக செயல்படுவதை பிலேசிபோ என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள்.
மாத்திரை, மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்று நோயாளி நம்புகிறார். இந்த நம்பிக்கை காரணமாக டம்மி மருந்து கொடுத்தாலும் உடல் குணமாகும் அதிசயத்தை பிலேசிபோ என்கிறார்கள்.
இந்த மருந்து நிச்சயம் வேலை செய்யும் என்று நோயாளி நம்புவதால் மூளை, உடல், மனம் ஆகியவை ஒன்றாக இணைந்து ஆக்கபூர்வமாக செயலாற்றுகின்றன. சர்க்கரை மாத்திரை, உப்புத்தண்ணீர் ஊசி என்றாலும் நோயாளியின் மூளையில் எண்டோர்பின், டோபமைன் போன்ற ஹார்மோன் சுரப்பதால் உடல் குணமடையத் தொடங்குகிறது.
மன அழுத்தம், அலர்ஜி, தூக்கமின்மை போன்றவைகளுக்கு இப்படி மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. ஒரே மாதிரி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஜ மருந்தும், இதுபோன்ற பிலேசிபோ மருந்தும் கொடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டுமே பலனளிப்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேபோல், ‘இந்த மருந்து போட்டால் தலை வலிக்கும்’ என்று சொல்லி இனிப்பு மாத்திரை கொடுத்தாலும் தலை வலிப்பதும் பிலேசிபோ எனப்படுகிறது. மனமே மருந்து என்பதை புரிந்துகொள்ளுங்கள்.