மருத்துவ ஆச்சர்யம்
பெண்களின் கருப்பை உட்சுவரில் இருக்கும் எண்டோமெட்ரியம் எனப்படும் நரம்புத்திசுக்கள், கர்ப்பம் ஏற்படாத தருணங்களில் கிழிந்து வெளியேறும் இயற்கையான நிகழ்வே மாதவிலக்கு எனப்படுகிறது. பெண்களுக்குப் பொதுவாக 25 முதல் 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. மனிதரைப் போலவே விலங்குகள், பறவைகள் இப்படி பாதிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு.
பறவைகளுக்கு பெண்களுக்கு இருப்பது போன்று யூட்ரஸ் எனப்படும் கர்ப்பப்பை கிடையாது. முட்டை இடுவதற்கு ஏற்ற ஹார்மோன் சுழற்சி மட்டுமே உண்டு. எனவே பறவைகளுக்கு மாதவிலக்கு வலி, ரத்தம் போன்றவை ஏற்படுவதில்லை.
அதேநேரம், மனிதரைப் போலவே இருக்கும் குரங்கு இனத்திற்கு மென்ஸ்ட்ரல் சைக்கில் எனப்படும் மாதவிலக்கு சுழற்சியும் சிறிய அளவுக்கு ரத்தப்போக்கும் ஏற்படுகிறது. யானை, குதிரை, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு சிறிய அளவில் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், மாதவிலக்கு சுழற்சி, ரத்தவெளியேற்றம் கிடையாது. விலங்குகள் தங்கள் வலி, வேதனையை வெளிப்படையாகக் காட்டுவதில்லை, அதனை மருத்துவத்தால் அளவிட இயலவில்லை என்பதால் இந்த ஆய்வு இன்னமும் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை.