எந்த அளவுக்கு பொறுமை வேண்டும்..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார்களே… எதுவரை..?

  • ஜி.முனியாண்டி, சத்திரரெட்டியாபட்டி.

ஞானகுரு :

ஒரு விதை முளைக்கும் என்று தண்ணீர் ஊற்றி பொறுமையுடன் காத்திருக்கத்தான் வேண்டும். அதேநேரம், விதைக்கப்பட்டது எத்தனை நாட்களில் அது முளைக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் கடந்தபிறகும் அதற்காக காத்திருப்பது முட்டாள்தனம். இதுவே, பொறுமைக்கு எல்லையாக இருக்க வேண்டுமே தவிர, அடக்கிவைத்த கோபத்தைக் காட்டுவது அல்ல.

கேள்வி : லட்சியமற்ற மாணவர்களின் வாழ்வு வீண் தானே..?

  • பி.சுமித்திராபாபு, ரோசல்பட்டி.

ஞானகுரு :

அப்படியென்றால் எந்த லட்சியமும் இல்லாமல் வாழும் அத்தனை உயிரினங்களும், மரம், செடி கொடிகளும் இந்த பூமிக்குப் பாரமா..? லட்சியம் என்பது மகிழ்ச்சி தரும் என்றால் இருக்கட்டும் இல்லையெனில் அதனை குப்பையில் தூக்கிப் போட்டு அன்றைய வாழ்க்கையை மகிழ்வுடன் வாழுங்கள். அதுபோதும். எந்த லட்சியவாதியும் காலம் கடந்து வாழ்ந்ததில்லை, வாழப் போவதுமில்லை.

Leave a Comment