ஸ்பெஷல் டாக்டர் ஜோக்ஸ்

Image

சிரிப்பு சிரிப்பா வருதுங்க

அப்பா :  டாக்டர்… என் பொண்ணுக்கு ஏன் மயக்க மருந்து கொடுக்காம ஆபரேஷன் செய்யப்போறதா சொல்றீங்க..?

டாக்டர் : அப்புறம், உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா நீங்க சொல்லிடக்கூடாது பாருங்க

……………………………………..

பெண் : டாக்டர், உங்களைக் கைராசி இல்லாதவர்ன்னு வெளில பேசிக்கிறாங்களே… உண்மையா…?

டாக்டர் : அது, என் மேல பொறாமையில யாராச்சும் சொல்வாங்க… ஏன் கேட்கறீங்க ?

பெண் : என் மாமியாரை உங்ககிட்டே அட்மிட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, நான் கைராசியில்லாத வேற டாக்டரையே பார்த்துக்கிடுறேன்.

…………………………………………….

ஆண் : என்ன டாக்டர், உங்க ஆஸ்பத்திரியில இருக்கிற ஒரு ஆபரேஷன் தியேட்டருக்கு 6ம் நம்பரும் அடுத்த ஆபரேஷன் தியேட்டருக்கு 100ம் நம்பரும் குடுத்திருக்கீங்க…

டாக்டர் : ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு மக்கள் புரிஞ்சுக்கணுமே.

…………………………………………

கணவன்: ஆபரேஷன்ல நான் இறந்து போயிட்டா, நீ எப்படியாவது நம்ம கல்யாணம் பண்ணிக்கோ

மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?

கணவன்: பின்னே.. இந்த  டாக்டரை பழிவாங்க எனக்கு வேற  எந்த வழியும் தெரியலேயம்மா..

…………………………………………………………………..

Leave a Comment