குபீர் சிரிப்பு ஜோக்ஸ்
டாக்டர் : திடீர்னு மாமியாருக்கு வலிப்பு வந்துடுச்சுன்னு சொல்றீங்க, ஆனா அவங்க கையில எப்படி இவ்வளவு பெரிசா சூடு வைச்ச காயம் இருக்குது..
பெண் : அவங்களுக்கு வலிப்பு வந்ததும் அடுப்புல சூடா இரும்புக்கல்லுதான் இருந்தது, அதைக் கொடுத்துட்டேன் டாக்டர்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
மகன் : அம்மா, நம்ம அப்பா முட்டாளுன்னு எங்க வாத்தியாருக்கு தெரிஞ்சிருக்கு…
அம்மா : எப்படி சொல்றே.?
மகன் : என்னை எப்போ பார்த்தாலும், முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே
…………………………………….
அவன் : நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.
இவன் : ஏன்… ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?
அவன் : நீ வேற… ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, காரையும் வண்டியையும் வித்துட்டேன்.
…………………………………………
டாக் டர் : நீங்கள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக என்னிடம் கூற வேண்டும். அப்போதுதான், உங்க பிரச்னையை என்னால் சால்வ் பண்ண முடியும்.
நோயாளி : நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறதால சொல்றேன் டாக்டர். உங்க நர்ஸ் கவிதாவை நான் ரொம்ப நாளா கணக்கு பண்றேன். எப்படியாவது சேர்த்து வைங்க டாக்டர்.
……………………………………….
நீதிபதி : எதுக்காக நீ வாடகைக்கு இருந்த வீட்டை ஒரே ராத்திரியில இடிச்சிருக்கே…
குற்றவாளி: வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள வீட்டைக் `காலி`பண்ணச் சொன்னார்
யுவர் ஆனர்
……………………………
போலீஸ் : திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க… அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
வீட்டுக்காரர் : நான் வேலைக்காரி ரூம்ல இருந்தேன் சார். அதான், சத்தம் போடலை.
………………………………
மகன் : கஞ்சன் அப்படின்னா என்னப்பா?
தந்தை : கண்ணிலே காசையே காட்டாதவனைத்தான் கஞ்சன்னு சொல்வாங்க
மகன் : காசுன்னா என்னப்பா???!!!!
………………………………………
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்துதான் இருப்பீங்க
கணவன் : இதுக்கு எந்த பரிகாரமுமே இல்லையா, ஜோதிடரே..?