அந்த ஆக்கபூர்வமான 1,825 நாட்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 396

சென்னை மேயராகப் பதவி வகித்தவர்களில் முழு நேரப் பணியாளராகத் திகழ்ந்தவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். இவருக்கு முந்தைய மேயர்கள் பெரும்பாலும் பகுதி நேரமாகவே மேயர் பணியை செய்துவந்தனர். மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே கருதி செயலாற்றினார்கள்.

ஆனால், பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து பதவி விலகிய கடைசி நாள் வரையிலும் முழு நேரத்தையும் மேயர் பணிக்காகவே அர்ப்பணம் செய்தவர் மேயர் சைதை துரைசாமி. மேயராகப் பதவி வகித்த 1,825 நாட்களும் பெருநகர சென்னையின் வளர்ச்சிக்கும் சென்னை மக்களின் நலனுக்காகவும் மட்டுமே சிந்தனை செய்தார்.  

சுத்தமான சென்னை, கை சுத்தமான மாநகராட்சி நிர்வாகம் என்று தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை மேயர் சைதை துரைசாமி கடைப்பிடித்து வருகிறார். அந்த வரிகளை தன்னுடைய மேஜையிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் எழுதி வைத்து, நேர்மையைத் தான் கடைப்பிடிப்பது மட்டுமின்றி, மாநகராட்சி ஊழியர்கள் அனைவரையும் கடைபிடிக்க பெரும் முயற்சி செய்தார். அது மட்டுமின்றி எந்த ஊழல் புகாரும் இல்லாமல் 5 ஆண்டுகள் அதாவாது 1825 நாட்கள் தூய்மையான ஊழலற்ற மேயராக சேவை செய்தார். தூங்கும் 5 மணி நேரம் தவிர, கிட்டத்தட்ட 19 மணி நேரம் முழுக்கமுழுக்க மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவே தன்னுடைய நேரத்தை செலவழித்தார்.

பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த நாட்களில் எல்லாம் எந்தவொரு அரசு சலுகையும் அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகும் தன்னுடைய சொந்த வாகனம், சொந்த செலவில் பெட்ரோல் என்று அரசு சலுகைகளை மறுத்தார். அவரது வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சீடரான சைதை துரைசாமியும் அரசு சலுகைகள், பயணப்படி உள்ளிட்ட எந்த ஒரு ஆதாயமும் மாநகராட்சியிடம் இருந்து பெறவில்லை. மதியச் சிற்றுண்டி, காபி போன்றவைகளையும் தன்னுடைய சொந்த செலவிலே செய்தார். சென்னை மாநகராட்சி வரலாற்றில், இப்படி சொந்தப் பணம் செலவு செய்து சேவையாற்றிய ஒரே மேயர் சைதை துரைசாமி மட்டுமே என்பது பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய தகவல்.  

பெருநகர சென்னை மேயராக அவர் எத்தனை சாதனைகள் படைத்தார் என்பது இன்றும் வரலாறாக இருக்கிறது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment