துப்புரவுப் பணியாளர்களுக்கு வீடு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 391

ஒரே ஒரு நாள் துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பணியைச் செய்யவில்லை என்றால், ஊரே அலங்கோலமாகிவிடும். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும். துப்புரவுப் பணியாளர்கள் அன்றாடம் சுத்தப்படுத்தும் பணியை செவ்வனே செய்வதால் மட்டுமே மக்கள் எல்லோரும் வீட்டுக்குள் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடிகிறது.

இதனால், துப்புரவுப் பணியாளர்கள் மீது மேயர் சைதை துரைசாமிக்கு எப்போதுமே அதிக பரிவும் அன்பும் உண்டு. எந்த இடத்தில் துப்புரவுப் பணியாளர்களை சந்தித்தாலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுப்புவார். அவர்களுக்கு கையுறை, காலுறை போன்ற பாதுகாப்புச் சாதனங்கள் போதிய அளவு கொடுக்க வேண்டும் என்பதற்கும் மேயர் சைதை துரைசாமி முன்னுரிமை கொடுத்தார்.

இந்த நிலையில் துப்புரவுப் பணியாளர்கள் பலரும் சாலையோரம் வசிக்கும் சூழல் இருப்பதைக் கண்டு ரொம்பவே வருந்தினார் மேயர் சைதை துரைசாமி. துப்புரவுப்பணியாளர்கள் போன்று சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த ஆயிரக்கணக்கான நபர்கள் சாலையோரம் வாழ்வதை அவரே நேரில் பார்த்திருக்கிறார். ஆகவே, இப்படிப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த வரையில் குடியிருப்பதற்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்.

துப்புரவுப் பணியாளர்களுக்கும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி கூறியபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். முடியாதது என்று ஒன்று இல்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகத் தெரியும். சரியாகத் திட்டமிட்டால் இதனை செய்து தர முடியும் என்று நம்பி களத்தில் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.

அப்படி உருவானதுதான் மூலக்கொத்தளம் குடியிருப்புத் திட்டம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment