வாரச் சந்தையில் நடமாடும் குளியல் அறைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 386

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்மைக்காக அம்மா வாரச்சந்தையை திட்டமிட்டார் என்றாலும், அதில் உள்ளூர் சில்லறை வியாபாரிகள், சிறு பொருள் தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் வந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்திருந்தார் மேயர் சைதை துரைசாமி.

வாரச்சந்தை என்பதால் அதிகாலை முதல் மாலை வரை மட்டுமே நடக்கும் என்று திட்டமிடப்பட்டது. அப்போது யாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் விவசாயிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் தேவையை யோசித்தார். அதாவது, சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக விவசாயிகள், வியாபாரிகள் அதிகாலையில் எழுந்து வருவார்கள்.

அக்கம்பக்கத்து கிராமம் அல்லது தொலை தூரங்களில் இருந்தும் விவசாயிகள் வரலாம். இவர்களில் பெண்களும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இவர்கள் போக்குவரத்து களைப்பு போக்குவதற்கு குளிக்க விரும்பலாம். வியாபாரம் முடித்தபிறகு குளித்துவிட்டுத் திரும்ப நினைக்கலாம். அதற்கும் வசதி, வாய்ப்புகள் செய்து தரவேண்டும் என்று விரும்பினார்.

வாரச்சந்தையில் நிரந்தர டாய்லெட் அமைப்பது சிக்கலானது என்று அதிகாரிகள் கருதினார்கள். உடனடியாக மாற்று யோசனையாக, நடமாடும் குளியலறை ஏற்பாடு செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார் மேயர் சைதை துரைசாமி. அந்த யோசனை அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் தந்தது. விவசாயிகள், வியாபாரிகளுக்கு குளியலறை மட்டுமின்றி போதிய கழிவறை வசதிகளும் செய்துதர வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். அது மட்டுமின்றி, சந்தைக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் போதிய வசதிகள் செய்து தருவதுடன், கழிவறை வசதியும் செய்ய வேண்டும் என்று கூறினார்.

வாரச்சந்தைக்கு வந்து செல்லும் ஒவ்வொரு நபருக்கும் என்னவெல்லாம் தேவைப்படும் என்று யோசித்து யோசித்துத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment