ஹிஹி ஜோக்ஸ்
அம்மா : என்னடா.. கடவுள் கிட்டே என்ன வேண்டிக்கிட்ட?
மகன் : எனக்காக நான் என்னைக்கும்மா வேண்டிக்கிட்டேன். என் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டேன்.
…………………………..
அவன் : ’எங்க வீட்டுக்குள்ள நேத்து பாம்பு வந்திடுச்சி. அதனால பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்
இவன் : பாம்பு வந்ததற்கு எதுக்கு பாம்பாட்டிய அடிச்சீங்க?’’
…………………………
கைதி 1 : அந்தக் கைதிக்கு எதுக்கு கணக்கு வாத்தியார் ட்யூசன் எடுக்கறாரு?
கைதி 2 : அவனுக்கு கம்பி எண்ணத் தெரியலையாம்!
……………………………
டாக்டர் : உங்களுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ணட்டுமா? அல்லது மைனர் ஆபரேஷன் பண்ணட்டுமா?
நோயாளி : ரெண்டுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?
டாக்டர் : மேஜர்னா நான் பண்ணுவேன்; மைனர்னா என் 16 வயசுப் பையன் பண்ணுவான்.
…………………………..
மனைவி : டியர்.. என்கிட்ட உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்ன? என் முகமா அல்லது அழகா?
கணவன் : (உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு) இதோ இப்பப் பேசுறபாரு இந்த மாதிரியான உன்னோட நகைச்சுவை உணர்வுதான் எனக்கு ரொம்பப் புடிக்கும்.
………………….
அரசர்: அமைச்சரே, இவர்கள் இருவரும் யார்?
அமைச்சர்: அரசே! இவர்கள் தங்களை கோழை என்றும் முட்டாள் என்றும் பேசிக்கொண்டிருந்தனர்.
அரசர்: அப்படியா? ராணுவ ரகசியத்தை அம்பலப்படுத்தியதற்கு இவர்களை பாதாளச் சிறையில் தள்ளுங்கள்.
…………………….
பையன் :அப்பா.. எனக்கு என்னுடைய அறிவு எங்கேயிருந்து வந்தது?
அப்பா : உன்னுடைய அம்மாகிட்டே இருந்துதான் வந்திருக்கும். ஏன்னா என்னுடைய அறிவு என்கிட்டேயே இருக்கே!.