நோய் வராமல் தடுப்பதே சித்தா…

Image

டாக்டர் டி.பாஸ்கரன், இம்ப்காப்ஸ் இயக்குநர்.

அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே தேடி ஓடிக்கொண்டிருந்த மக்கள், இன்று இந்திய மரபுசார் மருத்துவத்தின் மீதும் அக்கறை கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார் மருத்துவர்

கேள்வி : சித்த  மருத்துவ முறையின் அப்டேட் நிலை என்ன?

டாக்டர் டி.பாஸ்கரன் :

மக்களின் கல்வி நிலை அதிகரித்த இந்நாட்களில் மக்கள் பயன் தராத எதையும் ஒப்புக்கொள்வதில்லை. எனவே, மக்கள் சித்த மருத்துவத்தின் மீது கூடுதலாக அக்கறை செலுத்தத் தொடங்கியிருப்பதே மிகப்பெரும் மாற்றம் ஆகும். சர்க்கரை நோய் என்று எடுத்துக்கொண்டால் சித்த மருத்துவத்தில் அந்த பாதிப்புக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அதன் காரணமாக ஏற்படும் பக்க விளைவுகளுக்கும் மருந்துகளை சிபாரிசு செய்கிறோம். மேலும், உடல் சார்ந்து மட்டுமில்லை; மனம் சார்ந்தும் மருந்து வழங்கப்படும். உணவு முறைகளையும், வாழ்வியல் முறைகளையும் மாற்றிக்கொள்ள ஆலோசனையுடனே சித்த மருந்துகள் கொடுக்கப்படும். இதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. ஒரு காலத்தில் குடும்ப மருத்துவமாக இருந்த இதனை, மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளது வரவேற்கத் தகுந்தது.

கேள்வி ;  மாற்று மருத்துவத்தின் மீது மக்களுக்கு அதீத நாட்டம் உருவாகியுள்ளதற்கு என்ன காரணம்

டாக்டர் டி.பாஸ்கரன் :

மாற்று மருத்துவம் என்கிற பதமே தவறானது. ஆங்கில மருத்துவத்தைத் தவிர்த்த மற்ற மருத்துவ முறையெல்லாம் ’மாற்று மருத்துவ முறை (Alternative Medicine)’ என்று தவறாக மீண்டும் மீண்டும் பதிய வைக்கப்படுகிறது. உண்மையில், நமது இந்திய மருத்துவ முறைகள்(ஆயுஷ்) தான் முதன்மையானது (Native Medicine). இதில் முக்கியமானது  சித்த மருத்துவம். சமீப காலமாக சித்த மருத்துவத்தைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டுவருவது உண்மைதான். இதற்குக் காரணம் சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்ற நம்பிக்கை பெருகியுள்ளது. 

உடல் காட்டும் அறிகுறிகளை முன் வைத்து சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. பல்வேறு பரிசோதனை முறைகள், பரிசோதனைக் கூடங்கள் எல்லாம் இன்றைக்குத்தான் வந்துள்ளன. இவை எல்லாம் இல்லாத காலத்தில் ’நாடி பார்த்தல்’ எனும் நோய் அறியும் கலையின் மூலம், நோயின் மூலக் காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கும் வழக்கம் சித்த மருத்துவத்தில் இருந்தது. பல சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருந்துகளின் ஆற்றல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

இன்றைய மக்கள் சில உடல் கோளாறுகளை வீட்டு அஞ்சறைப் பெட்டியிலிருக்கும் பொருட்களைக் கொண்டு குணப்படுத்திக்கொள்ள முன் வந்துள்ளனர். இதன் வெளிப்பாடுதான் ஊர் முழுக்க புதிதாக தோன்றி வரும் நாட்டு மருந்துக் கடைகள்.

கேள்வி ; சமூகவலைதள தாக்கத்தினால் சித்த மருத்துவத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதா?

டாக்டர் டி.பாஸ்கரன் :

யூடியூப், இன்ஸ்டா, வாட்ஸ் அப் போன்றவை மூலம் தகவல்கள் பரப்பப்பட்டாலும், மக்கள் பயன்படுத்தி அதன் உண்மையை உணர்ந்ததால்தான் சித்த மருத்துவத்தைத் தேட தொடங்கியிருக்கிறார்கள். சித்த மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும் என்கிற நம்பிக்கையும் மக்களில் சிலரிடம் உள்ளது. குணப்படுத்த காலம் எடுத்தாலும், நோயின் பக்க விளைவுகளை களைவதுடன், மீண்டும் அந்த பாதிப்பு வராமல் செய்யும் ஆற்றலும் சித்தாவுக்கு உண்டு. சித்த மருத்துவத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தி, இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதும் உண்மைதான். அரசு இதற்கென்று நிதி ஒதுக்கித் தந்து உதவினால் எதிர்வரும் காலங்களில் சித்த மருத்துவம் இன்னமும் மிளிரும்.

கேள்வி ; சித்த வைத்தியம் குறிப்பாக, எந்தெந்த நோய்களுக்கு பலன் தரும் என்று சொல்ல முடியுமா?

டாக்டர் டி.பாஸ்கரன் :

ஆரம்ம்ப கால புற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள், ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், உயிர்கொல்லி நோய்களுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கக் கூடியது, தொடர்ந்து சித்த மருந்துகளை சாப்பிட்டு வருவது கட்டாயம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி ; ’கடப்பாரையை முழுங்கினதற்கு சுக்குக் கசாயமா’  என்கிற வட்டார வழக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

டாக்டர் டி.பாஸ்கரன் :

இன்றைய நாட்களில் விபத்து போன்ற தீவிர பாதிப்புகளுக்கு நவீன சிகிச்சையைத்தான் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப கட்ட இதய அடைப்பு நோயை சித்தாவின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பாதிப்புகளுக்கு என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் பயன்படுத்தித்தான் தெளிவு பெற வேண்டும். நோய் வராமல் இருப்பதைத்தான் முதன்மையானதாக சித்தா தனது கொள்கையாகவே வைத்துள்ளது. இதனையும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி ; நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம் என்று தமிழ் சித்த மருத்துவத்தை கருதும் போக்கும் மக்களிடம் இருக்கிறதுதானே..?

டாக்டர் டி.பாஸ்கரன் :

இது மக்களின் தெளிவின்மையைத்தான் காட்டுகிறது. வாழ்வியில், பழக்க வழக்கங்கள், உணவு முறை, தூங்கு நேரம், உடற்பயிற்சி போன்றவற்றை கணித்துதான் சித்தாவில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. கட்டு, கலங்கு, செந்தூரம், பர்பம் போன்ற அதிஅற்புதமான சித்த மருந்துகள் உள்ளன. இவற்றை செய்ய ஏராளமான பண வசதி தேவை. இன்றைய நாளில் இவற்றை தயாரிக்க முடியாத நிலை உள்ளது. இவை எல்லாம் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தால், சித்த மருத்துவ முறை இன்னமும் பெரிய நிலையை சென்றடையும்.’’

கேள்வி ; இன்று சித்த மருத்துவ கல்லூரிகளில் படித்துவிட்டு வரும் மருத்துவர்கள் மரபுரீதியான, பாரம்பரிய மருத்துவர்களை போலி மருத்துவர்களாக கருதும் நிலை இருக்கிறதே.?

டாக்டர் டி.பாஸ்கரன் :

பாரம்பரிய மருத்துவ முறை இல்லை என்றால் சித்த மருத்துவ முறையே இல்லை. இன்றைய  மருத்துவக் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகிற பாடங்கள், மருந்து முறைகள் எல்லாம் நமது முன்னோர்கள் மரபு ரீதியாக செய்துகொண்டிருந்தவைதான். அவர்கள்தான் அஸ்திவாரங்கள். படித்துவிட்டு வந்ததாலேயே பாரம்பரிய மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என்று கருதுவது தவறானது. அகடாமிக் தகுதியுடன் வரும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மருத்துவர்கள் நமது பாரம்பரிய முன்னோர்களை போற்றத்தான் செய்கிறார்கள்.’’

கேள்வி : ’சனி நீராடு’, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, பேதி மருந்து சாப்பிடுவது போன்ற பழக்க வழக்கம்  எல்லாம் காணாமல் போய்விட்டது. இவற்றால் நன்மை உண்டா?

டாக்டர் டி.பாஸ்கரன் :

எண்ணெய் குளியல் முறையை இப்போது பலர் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்லெண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும். ‘சனி நீராடு’ என்பது நமது முன்னோர்கள் கடைபிடித்த சிறந்த பழக்கம். மலையிலிருந்து வரும் நீருக்கு கருப்பு நீர் என்று பெயர். அதை குறிக்கும் வகையில் உருவானதுதான் சனி நீராடு என்பது.  கருப்பு நிறத்துக்கு உகந்தது சனிக்கிழமை… எனவே சனிக்கிழமையில் எண்ணெய் குளியலை மேற்கொள்வது நல்லது என்று நமது முன்னோர்கள் வகுத்தார்கள். அதுபோன்றே நமது உடம்பில் கழிவுகளை அகற்றிக்கொள்ள பேதி மருந்துகள் சாப்பிடுவதும் எல்

Leave a Comment