ஆரோக்கிய பானம் புரளி
தமிழரின் பாரம்பரிய பானம் கள்ளு குடிப்பதை தடுக்க முடியாது என்று நாம் தமிழர் சீமான் போராடிக்கொண்டு இருக்கிறார். இதற்காக பனை மரத்தில் ஏணி கட்டி ஏறி கள்ளு இறக்குகிறார். உண்மையில் கள்ளு உடலுக்கு நல்லதா..?
கள்ளு பானத்தில் இயற்கையான எத்தனால் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் உடனடி பாதிப்பாக நினைவாற்றல் குறைவு, முடிவெடுக்கும் திறன் பாதிப்பு, மற்றும் எதிர்கால பாதிப்பாக டிமென்ஷியா போன்ற நரம்பியல் நோய்கள் உருவாகலாம். அதிக கள்ளு குடிப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பும் அதன் தொடர்பாக சிரோசிஸ் (cirrhosis), கல்லீரல் புற்றுநோய் (liver cancer) போன்ற தீவிர நிலைகளுக்குக் காரணமாகலாம். இதயத்துடிப்பையும் இது பாதிக்கிறது. அதோடு இயல்பான குடும்ப வாழ்க்கைமுறையை சீர்குலைக்கிறது.
அளவோடு கள்ளு குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என்பது நிச்சயம் உண்மை அல்ல. மேலும் கள்ளுவில் கலப்படம் சேர்கையில் கண் பார்வை இழப்பு, கை கால் முடக்கம் போன்ற ஆபத்துகள் உருவாகலாம். எனவே, சீமான் பேச்சைக் கேட்டு ஏமாந்து போகாதீர்கள். அவர் உண்மையில் கள்ளு ஆதரவாளர் என்றால் அவரது மனைவி, குழந்தைகள் தினமும் கள்ளு குடிக்கலாமே…
அதை சீமான் மட்டுமல்ல, கள்ளு ஆதரவாளர்களும் செய்யவே மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தேவை எல்லாம் வியாபாரம் மட்டுமே. வியாபாரம் நல்லபடியாக நடக்க வேண்டும், லாபம் அதிகம் கிடைக்கவேண்டும் என்பதற்காக எத்தனை பொய்யும் சொல்வார்கள்.