ஆரோக்கிய ரகசியம்
காலுக்கு ஒரு தலையணை, கட்டிப்பிடிக்க ஒரு தலையணை, தலைக்கு இரண்டு தலையணை என்று விதவிதமாகத் தூங்குபவர்களே அதிகம். தலையணை குட்டியாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், வட்டமாக இருந்தாலும், சதுரமாக இருந்தாலும் பக்கவிளைவுகள் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தலையணை வைத்துக்கொள்ளாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. உயரமான தலையணை பயன்படுத்துபவர்களுக்கு தோள்பட்டை, கழுத்து வலிக்கு வாய்ப்புகள் அதிகம். உடல் எலும்புகள் சீராக செயலாற்றுவதற்கும் தலையணை இல்லாத தூக்கம் பயன்படுகிறது.
ஆச்சர்யமான ஒரு தகவல் என்னவென்றால், தலையணை பயன்படுத்தது முகச்சுருக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. கன்னத்து தசை, கழுத்து தசைகளை தலையணை அழுத்தம் கொடுப்பதாலே முகச்சுருக்கம் உண்டாகிறது. எனவெ, தலையணை வைக்காமல் நேராகப் படுத்துத் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் இருக்காது. தலையணை இல்லை என்றால் தூக்கம் வராது என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தலையணை உயரத்தைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும்.
கழுத்து எலும்பு, முதுகு எலும்பில் பிரச்னை இருப்பவர்கள் மட்டும் மருத்துவர் ஆலோசனையின் பேரில் தலையணை பயன்படுத்தலாம். மற்றவர்களுக்குத் தலையணை வேண்டவே வேண்டாம்.