• Home
  • யாக்கை
  • தேனீ கொட்டினால் இதய நோய் வராதாம்…!

தேனீ கொட்டினால் இதய நோய் வராதாம்…!

Image

மருத்துவ மூட நம்பிக்கைகள்

தெருவுக்குத் தெரு ஒரு மருத்துவர் இருக்கிறார். செல்போனில் மருத்துவம் குறித்த அத்தனை சந்தேகங்களுக்கும் விடை இருக்கிறது. ஆனாலும், சில பொய்யான மருத்துவப் புரளிகளை முழு உண்மை என்று பலரும் நம்புகிறார்கள்.

தொடர்ந்து மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு கல்லீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அதனால், தொடர்ச்சியாக எடுக்க வேண்டிய மருந்துகளை அவ்வப்போது நிறுத்திக்கொள்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற அளவில் அளவீடு செய்தே மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக்கொள்வதே ஆபத்தே தவிர, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்து இல்லை. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் ஆபத்துக்கு ஆளானவர்களே அதிகம்.

காய்ச்சல் வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கம்ப்ளீட் ரெஸ்ட் மட்டும் போதும் என்றே பலரும் நினைக்கிறார்கள். அனைத்து காய்ச்சலும் சாதாரண வைரஸால் வருவதில்லை. எனவே, காய்ச்சல் அறிகுறிகளை மருத்துவரிடம் கூறி மருந்து மூலம் குணப்படுத்துவதே சரியான வழிமுறை.

தேள், பாம்பு போன்ற கடிகளுக்கும் காயங்களுக்கும் அந்த இடத்தில் சூடு வைத்தால் விரைவில் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு இருக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாய் கடிப்பதால் ஆபத்து கிடையாது, சோப்பு போட்டு கழுவினாலே போதும் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த சூழலில் உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.

ஒரு முறை தேள் அல்லது தேனீ கொட்டியவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இதய நோய் வராது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். காய்ச்சல் வரவில்லை என்றால் தடுப்பூசி வேலை செய்யவில்லை என்கிறார்கள். இது போன்ற மருத்துவப் புரளிகளை நம்பி ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment