நர்ஸை வைச்சுக்கோங்க டாக்டர்

Image

சிரிப்போ சிரிப்பு

எதுக்கு டாக்டர் ஒரு சிம்பிள் ஆபரேஷனுக்குப் போய் நாலு டாக்டர்களை கூப்பிட்டிருக்கீங்க…

நாளைக்கு என் மேலே மட்டும் பழி விழுந்துடக்கூடாதுல்ல. அதுக்குத்தான் இவ்ளோ பேரைக் கூட்டிக்கிறேன்.

…..

ஆபரேஷன் முடிச்சுட்டு வந்ததும் டாக்டர் ஒரு விரலை தூக்கிக் காட்டிட்டுப் போறாரே… என்ன அர்த்தம்?

டாக்டருக்கு கிரிக்கெட்ல ஆர்வம்னு தெரியாதா? பேஷண்ட் அவுட்.

…….

உங்க மாமியாருக்கு இந்த மருந்தை ஒரு நாள்கூட மறக்காம குடுத்துடுங்க, இல்லைன்னா டேஞ்சர்…

நீங்க பொய் சொல்றீங்க டாக்டர். இன்னைக்கு நான் மாத்திரை கொடுக்காம இருக்கிறேன், என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்.


……………………


டாக்டர் என்னை ஞாபகம் இருக்கா

என்னப்பா, இப்படி கேட்டுட்டே. ஆபரேஷனுக்கு இடையில் நான் போன் பேசுன நேரத்தில் தப்பிச்சு ஓடுனவந்தானே, உன்னை மறக்க முடியுமா..?

……………………………………….


ஏன், அந்த டாக்டர் போலின்னு சொல்றே..?

என்  மாமியார் மனசில என்ன இருக்குன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்றாரே…


…………………………..


டாக்டர், நான் +2 படிச்சிருக்கேன், எப்படியாவது உங்க கிளீனிக்ல நர்ஸா வைச்சுக்கோங்களேன்…

அட போம்மா, என்னைவிட பெரிய படிப்பு படிச்சவங்களை வைச்சிருந்தா, என் பொழப்பு என்னத்துக்கு ஆகிறது?

……………………………………


டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

…………………………………

டாக்டர்கிட்டே உண்மையை மறைக்கவே கூடாது, சொல்லுங்க…

அதாவது டாக்டர், நிஜமாவே உங்க நர்ஸ் அழகா இருக்காங்க, அவங்களை பார்க்கத்தான் இங்கே வந்தேன்.

………………………

Leave a Comment