தாலிக்குத் தங்கம் திட்டத்திலும் சீர்திருத்தம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 336

முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தாலிக்குத் தங்கம் திட்டம் கொண்டுவரப்பட்டது. திருமணத்துக்கு நிதி உதவி வழங்கினால் செலவழித்து விடுவார்கள். ஏழைப் பெண்கள் தாலிக்குத் தங்கம் கொடுத்தால், அதை கழட்டுவதற்கு யோசிப்பார்கள். அவசரத் தேவைக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தாலிக்குத் தங்கம் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்த திட்டம் தமிழகம் முழுக்கவே சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, ஏழை எளிய மக்கள் இந்த திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வாங்குவதற்கு ஆர்வமுடன் முன்வந்தார்கள். ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ரொம்பவே கெடுபிடி காட்டுவதும், மக்களை அலைக்கழிப்பதும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கிடைக்கும் நல்ல பெயரை அதிகாரிகளும் அலுவலர்களும் கெடுக்கும் வகையில் சில முறைகேடுகளில் ஈடுபடுவதும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. அரசு நிர்வாகத்தில் எங்கு, என்ன குறைபாடு இருந்தாலும் தானாக ஆஜராவது மேயர் சைதை துரைசாமிக்கு வழக்கம்.

அதேபோல் தாலிக்குத் தங்கம் திட்டத்திலும் என்ன நடக்கிறது என்று முழுமையாக ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகள் சிலர், ‘இந்த துறைக்கும் மேயர் பணிக்கும் சம்பந்தமே இல்லை, தேவையில்லாமல் தலையிட்டால் மேலித்தில் இருந்து கெட்ட பெயர் கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், மேயர் சைதை துரைசாமி, அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

ஏழைகளுக்குப் பயன் கிடைக்கும் வகையில் தாலிக்குத் தங்கம் திட்டம் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment