குப்பைக்குத் தங்க காசு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 324

மக்கும் குப்பைகளை விட மக்காத குப்பைகள் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் பல அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன என்பதை மேயர் சைதை துரைசாமி மாணவர்களுக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் புரியும் வகையில் பிரசாரம் செய்தார். அதோடு சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுறுத்தினார்.

பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், அட்டை டப்பாக்கள், கேரிபேக்ஸ், பால் கவர் போன்ற மக்காத குப்பைகள் நிலப்பரப்புகள், கடல்கள், மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் குவிந்து, இடத்தை அசுத்தமாக்கி மண்ணையும் மாசுபடுத்துகின்றன. மக்காத குப்பைகள் வனவிலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. மக்காத குப்பைகளின் விளைவுகளை குறைக்க முறையான கழிவுகளைக் கையாளுவது அவசியம். 

இவற்றிலிருந்து மின்சார ஒயர்கள், பல்புகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவை மூன்றாவது வகை. இவற்றை தனியாகப் பிரித்து துப்புரவுப் பணியாளர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும். எனவே, வீடுகளில் இரண்டு குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார் மேயர் சைதை துரைசாமி.

ஒரு தொட்டியில் மக்கும் குப்பை மற்றும் மற்றொரு தொட்டியில் மக்காத குப்பைகள் அளிக்க வேண்டும். மருத்துவக் கழிவு போன்ற அபாயகரமான பொருட்களை தனியாக சேகரித்து வைக்க வேண்டும். ஒரு தொட்டி பயன்படுத்துபவர்கள் என்றால் தூய்மைப் பணியாளர்களிடம் அளிக்கும்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து இரண்டு கவர்களில் அளிக்க வேண்டும் என்று மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார்.

குப்பை அகற்றும் பணியில் மக்களும் பெரிய அளவில் பங்கெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சைதை துரைசாமி. அதனால் நலச்சங்கங்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அதன் அடிப்படையில்  பொதுமக்களும் பங்கெடுக்கும் வகையில் புதுமையான ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி. அது, தங்கக்காசு திட்டம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment