இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 315

அதிகாலை முதல் முன்னிரவு வரை துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதே சென்னை மாநகராட்சி ஊழியர்களின் அன்றாடக் கடமையாக இருந்துவந்தது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் குப்பை அள்ளும் காம்பேக்டர் லாரிகள் ஊருக்குள் உலவி வந்தன. சின்னச்சின்ன சந்துகளிலும் குப்பைத் தொட்டிகளை அகற்றுவதற்கு லாரிகள் வந்து நிற்கவும், அகற்றவும் அவசியம் இருந்தன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

நெருக்கமான தூரத்தில் குப்பைத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் காம்பேக்டர் லாரிக்குப் பின்னே ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதும், எதிரே வரும் வாகனங்கள் நகர முடியாமல் தவிப்பதும் தொடர்கதையாக இருந்தது. இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தீவிரமாக யோசனை செய்தார்.

உண்மையான அக்கறையும் தேடுதலும் இருந்தால் சரியான பாதை நிச்சயம் தென்படும் என்பதற்கு மேயர் சைதை துரைசாமியே உதாரணம். அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்கள் என பலரிடமும் ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் அடிப்படையில் ஒரு புதிய விதிமுறை வகுக்கப்பட்டது. அதாவது, குறுகிய பாதை உள்ள பகுதிகளில் எல்லாம் இரவு நேரங்களில் குப்பை அகற்றும் பணி மேற்கொள்வதற்கும், இரவு நேரங்களிலே காம்பேக்டர் லாரிகள் மூலம் குப்பைகளை அகற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த இரவு நேர குப்பை அகற்றம் சென்னையில் அமோக வரவேற்பு பெற்றது. இரவுப் பணியாக குப்பைகள் அகற்றப்பட்டு விடுவதால், காலையில் எழுந்து பார்க்கும் மக்களுக்கு சுத்தமான தெருவும், காலியான குப்பைத் தொட்டியும் மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. குப்பைத் தொட்டிகளுக்கே அருகில் இருக்கும் வீடுகளில் வசிபவர்களுக்கு இந்த துன்பம் மிகவும் நன்றாகத் தெரியும். அரிதாக எப்போதோ ஒரு முறை மட்டும் நடைபெற்றுவந்த இரவுப் பணியை, நிரந்தரமாகக் கொண்டுவந்து சென்னையை சுத்தமாக்கியவர் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment