நடைமுறைக்கு வந்த போட்டோ ஆதாரம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 309

மாநகராட்சி மீது நம்பிக்கை வைத்து மக்கள் புகார் சொல்கிறார்கள். அந்த நம்பிக்கையை மேயர் என்ற முறையில் காப்பாற்றி புகார்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். அதனால் தான், குப்பை அகற்றப்பட்டது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்பட ஆதாரம் காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவர விரும்பினார்.

மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையைக் கேட்டு ஆய்வாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்த ஆலோசனையை எப்படியாவது தட்டிக்கழிக்க நினைத்தார்கள். ஏனென்றால் இது கூடுதல் பணி சுமை. அதனால், நமது ஊழியர்களிடம் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு நவீன செல்போன் இல்லை, செல்போனில் இணையம் இல்லை என்று தட்டிக் கழித்தார்கள்.

துப்புரவு ஆய்வாளர்கள் இப்படி சொல்வார்கள் என்பதை மேயர் சைதை துரைசாமி எதிர்பார்த்தே இருந்தார். அதனால், உடனடியாக அனைத்து துப்புரவு ஆய்வாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் புகைப்படம் எடுக்கும் வசதி கொண்ட செல்போன் வழங்கிவிடுவோம் என்று பதில் கூறினார். இப்படி ஒரு பதில் எதிர்பார்க்காத ஆய்வாளர்கள் மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியானார்கள்.

இதையடுத்து துப்புரவு ஆய்வாளர்களுக்கு புதிய செல்போன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் குப்பை அகற்றுவதற்கு முந்தைய நிலை மற்றும் அகற்றப்பட்ட பின்பு சுத்தமான நிலையை புகைப்படம் அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அதனை தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கவும் மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார்.

அதனால் துப்புரவுப் பணிகள் சரியாக நடைபெறுவதை புகைப்படச் சான்று மூலம் அறியப்படும் அளவுக்கு சென்னை மாநகராட்சி நவீனத்துவம் அடைந்தது. மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த புகைப்பட நடைமுறையால் மேலும் சில நன்மைகள் கிடைத்தன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment