மொத்தமே பத்து விதிகள்

Image

வாழ்க்கை உங்கள் கையில்

மனிதர்கள் ஜெயிப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கும் மொத்தமே 10 விதிகளைக் கடைப்பிடித்தால் போதும். அவை என்னவென்று பார்க்கலாம்.

ஒன்றாம் விதி : இந்த நிமிடம் மட்டுமே நிஜம். நேற்றிலும் நாளையும் வாழ இயலாது.

இரண்டாம் விதி :  வாழ்க்கையில் எதுவும் தானாக கிடைப்பதில்லை. நமக்குத் தேவையானவற்றை நாம் தான் பெற்றுக்கொள்ள  வேண்டும்.

மூன்றாம் விதி : மாற்றங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர் மட்டுமே, எதிர்ப்புகளை மீறி முன்னேறி நகர முடியும்.

நான்காம் விதி :  நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும்

ஐந்தாம் விதி : எல்லோரையும் மன்னித்துவிடுங்கள். அதைவிட பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை.

ஆறாம் விதி : ஒரே நேரத்தில் இரு படகுகளில் பயணம் செய்ய முடியாது.

ஏழாம் விதி : எந்த ஒரு நபரையும் எடை போட முயற்சிக்க வேண்டாம்.

எட்டாம் விதி : மாற்ற முடியாத விஷயங்களை நினைத்து கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.  

ஒன்பதாம் விதி : குறைவாகப் பேசுங்கள். உங்கள் ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

பத்தாம் விதி : காலம் குறைவாகவே இருக்கிறது. எல்லோரையும் அன்பு செய்யுங்கள்.

Leave a Comment