நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்

Image

கவித்துவம்

சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்

அப்பா

அப்பாவை மட்டும்

ரசிப்பதில் ஆரம்பித்து,

அப்பாவிடமிருந்து விலகி நின்று,

அப்பாவை வெறுத்து,

அப்பாவுக்காக ஏங்கி,

அப்பாவைப் போலவே

மாறி நிற்பதுதான் வாழ்க்கை.

  •  சு.ப.முத்துக்குமார்

வழி

வழி முற்றிலும் தெரியாத போதும்

வழி முற்றிலும்

தெரிந்துவிட்ட போதும்

வழியின் அழகு

எங்கோ மறைந்து போய்விடுகிறது.

  • போகன் சங்கர்

எங்கே..?

இருப்பதைத் தொலைப்பதும்,

தொலைப்பதை தேடுவதுமாய்,

இவ்வாழ்தல்

ஓரு சுவாரஸ்யமான

நெடும் பயணம்.

  • பாமதி

Leave a Comment