வார்த்தைகளே வரம்
கலங்கரை விளக்கம், கை காட்டி மரம், வழி காட்டிப் பலகை போன்று நல்ல வார்த்தைகள் மக்களுக்குப் பயனளிக்கின்றன. ஒரே ஒரு பொன்மொழி, அவரது வாழ்க்கையை மாற்றியே விடலாம். படித்துப் பாருங்கள்.
- இங்கே எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ… அத்தனை கோடி நியாயங்கள் இருக்கும். ஆனால்… தர்மம் ஒன்றுதான்…!!! – ஜே.கே
நாம் எல்லோரும் மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் தான் ஆனால் தூக்கிலிடும் தினம் தான் வித்தியாசம்…!! – டால்ஸ்டாய் ~
- நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறிந்துவைத்திருப்பதுதான் என்றென்றும் இறுதியான அறிவு என்ற முடிவு போல் அபத்தமானதும் ஆபத்தானதுமான சிந்தனை வேறெதுவுமே இல்லை.! – சுந்தரராமசாமி
விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. – எஸ்ராமகிருஷ்ணன்
- கோவிலில் சாமி கும்பிட வந்தவனைப் பார்த்து கும்பிட்டான் பிச்சைக்காரன். இங்கு யார் கடவுள்? – தந்தை பெரியார்
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்து விடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. – விவேகானந்தர்
- மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம், நாம் நல்லவர்களாகி விட முடியாது. – காந்தியடிகள்
என்னுடன் நான் எப்பொழுதுமே முரண்படுவதே இல்லை. நான் செய்ய விரும்புவது எதுவாக இருந்தாலும், அதைச் செய்கிறேன்; எந்த குற்றவுணர்வும் இல்லாமல் – ஜீனே மோரே
- எது உன்னை மகிழ்ச்சியாக ,உயிர்ப்புடன் வைத்திருக்கிறதோ அதனுடன் நெருக்கமாக பிணைந்திரு.
– ரூமி
இரவில் தூங்கி காலையில் விழிக்கின்ற ஒவ்வொரு நாளும் நீ புதிய மனிதனாக பிறக்கிறாய். இன்றைக்கு நீ எந்த மாதிரியான மனிதனாக இருக்கிறாய் என்பதுதான் முக்கியமானது – சாக்கியமுனி