• Home
  • உறவுகள்
  • மகளிர் தினத்தில் எடுக்கவேண்டிய சபதம்

மகளிர் தினத்தில் எடுக்கவேண்டிய சபதம்

Image

பெண்களே ரெடியா?

இன்று சர்வதேச மகளி தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வகையில் இது வியாபார நாளாக மாறிவிட்டது. அதாவது, பெண்ணுக்கு என்னவெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும், என்ன கொடுத்தால் பெண் மயங்குவாள் என்று பொருளை வாங்கவைக்கும் நாளாகவே வியாபாரிகள் மாற்றிவிட்டார்கள்.

பெண்களுக்கு சம உரிமைகள், சம அளவு சம்பளம், சம அளவு மரியாதை ஆகியவையே கிடைக்க வேண்டும். இந்த உரிமைகள் எல்லாம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டவை. இவற்றை பெற என்ன செய்ய வேண்டும்..?

எந்த இடத்தில் பொருளை தொலைத்தோமோ, அந்த இடத்தில் தான் தேடினால் தான் அது கிடைக்கும். அது போல் பெண்ணுக்கு விடுதலை, உரிமை, சமத்துவம், மகிழ்ச்சி வேண்டும் என்றால், அதை ஆண்களிடம் அல்லது சமுதாயத்திடம் எதிர்பார்க்கக் கூடாது. பெண் அவளுக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

  1. குடும்பம், அலுவலகம், நட்பு வட்டாரம் என எங்கேயும் அங்கீகாரத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் மனதுக்கு நிறைவாக செய்வது மட்டுமே போதும்.
  2. பாராட்டை மதிக்காதீர்கள். சமையல் சூப்பர் என்று பாராட்டுவதை ஏற்றுக்கொண்டால் அதை விட சிறப்பாக சமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறீர்கள். எனவே, பாராட்டை பெரிதாக மதிக்காமல் உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.
  3. பாசத்துக்கு கட்டுப்படாதீர்கள். அம்மா எனக்காக எதுவும் செய்வார், மனைவிக்கு என் மீது உயிர் என்றெல்லாம் பொய் சொல்லி தங்கள் காரியம் சாதித்துக் கொள்பவர்களின் பாச வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
  4. நான் இல்லேன்னா வீட்டில் எதுவும் நடக்காது என்று எல்லா வேலைகளையும் தலையில் போட்டுக்கொண்டு பொறுப்புகளை சுமக்காதீர்கள். நீங்கள் இல்லையென்றால் நாளை வேறு ஒரு பெண் அந்த இடத்துக்கு வந்துவிடுவார் என்பதைப் புரிந்துகொண்டு, பொறுப்புகளை பிரித்துக்கொடுங்கள்.
  5. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம் கொடுங்கள். மனம் மகிழ்ச்சி அடைவதற்கு தினமும் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். வெற்றி, தோல்விக்கு நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment