ஜோக்கோ ஜோக்கு..!
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
…………………
லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!
பிச்சைக்காரர்: என்ன மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.
………………..
ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: ஐ லவ் யூ டூ!
இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு.
…………………….
அவர் : “உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது.”
இவர் : “அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?”
…………………………
நீதிபதி : ” அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன் திருடினாய்?”
திருடன்: “என்னோட சாவி எதுவுமே அந்தப் பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டைஉடைக்க வேண்டியதாப் போச்சிங்க”
………………………
ஆசிரியை : “ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?”
மாணவன்: “லூசு மாதிரி பேசாதீங்க சார், எந்தக் கடையில 1 ரூபாய்க்கு ஆப்பிள் தர்றாங்க..?”
…………………….
அவர் : “ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?”
பிச்சைக்காரன் ” ‘உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார் சார்”
………………………..
டாக்டர் : தேள் கொட்டினால் பயங்கரமா வலிக்குமே… நீங்க இப்படி சிரிக்கிறீங்களே…?”
இவன் : “தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு…!”