தனியார்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 282

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மக்களுக்குத் தெரியவந்தால் மட்டுமே புகார் அளிப்பார்கள். புகார்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும் என்று நினைத்தால் யாரும் புகார் மனு கொடுக்கவே மாட்டார்கள். மேயர் சைதை துரைசாமிக்கு ஒரு புகார் அல்லது கோரிக்கை மனு கொடுத்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மக்களுக்குத் தெரியவந்தது. மக்கள் நம்பிக்கையை மேயர் சைதை துரைசாமி பெற்றுவிட்டார்.

அதிகாரம் படைத்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் மேயர் சைதை துரைசாமி நிலங்களை மீட்கிறார் என்பது தெரிந்ததும் பொதுநலச் சங்கத்தினரும், மக்கள் நல ஆர்வலர்களும் தைரியமாகப் புகார் கொடுத்தனர். புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேயர் சைதை துரைசாமி உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்.

நந்தனம், டர்ன்புல்ஸ் சாலையில் மூப்பனார் மேம்பாலம் அடையாறு ஆற்றுக்கு அருகே, சென்னை  மாநகராட்சி பூங்கா அமைப்பதற்கு  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநகரம் ஆகிய  துறைகளிடம் இருந்து 65 மனை நிலம் பெறப்பட்டு, அதில் 36  மனை நிலத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. மீதமுள்ள 29 மனை நிலத்தை  தனிநபர் ஒருவர்  நில ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.  உயர்நீதி மன்றம் மற்றும் சிட்டி சிவில் நீதிமன்றங்களுக்குச் சென்று, அந்த நிலம் மீட்கப்பட்டது.  பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிலத்தின் வழிகாட்டு மதிப்பின்படி  அன்றைய கணக்கில் 107 கோடி ரூபாய் ஆகும்.

அமைந்தகரை வட்டம் – பெரிய கூடல் கிராமம் பிளாக் எண்.15ல் கோவிந்தன் மற்றும் சிலருக்கு அளிக்கப்பட்ட பட்டா  ரத்து செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சியின் 72 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.  இங்கு மீட்கப்பட்ட சொத்துக்களின்  வழிகாட்டி மதிப்பு ரூ.33  கோடி ஆகும். இன்றைய ஆக்கிரமிப்புகளைத் தடுத்தது மட்டுமின்றி, முந்தைய ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து மீட்டவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment