கேபிள் வயர்களுக்கு வாடகை அதிகரிப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 280

கேபிள் வயர்களில் புரட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். அதற்கு முன்னர் இருந்தவர்கள் கேபிள் வயர்கள் பற்றி யாரும் கவலைப்பட்டதே இல்லை. அதிகாரிகளும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மேயர் சைதை துரைசாமி மட்டுமே கேபிள் வயர்களை மாநகராட்சிக்கு வருமானமாக மாற்றிக் காட்டினார்.

சென்னை மாநகராட்சியில் கேபிள் டி.வி.  மற்றும் இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வடக்கயிறுகளை  தெரு விளக்கு கம்பங்கள் வழியாக அல்லது  பூமிக்கடியில்  எடுத்துச் செல்வதற்கு,  சென்னை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 9,400 ரூபாய் என்று முன்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  இந்த வாடகையைக்கூட, முறையாகக் கட்டாமல் மொத்த கேபிள் தூரத்தைக் கணக்கிடாமல், தாங்களாகக் கணக்கிட்டு குறைவான தூரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தி மாநகராட்சியை ஏமாற்றி வந்தனர்.

எனவே மேயர் சைதை துரைசாமி இந்தக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார். புதிய அரசாணைப்படி, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32,450/-  என வாடகை உயர்த்தப்பட்டது. அதோடு  ஒவ்வோர் ஆண்டும்  10 விழுக்காடு  அதிகரித்து வசூலிக்கவும் ஆணையிடப்பட்டது.  அரசு நிர்ணயித்துள்ள  வாடகை கட்டணம் செலுத்தாத அனைத்து கேபிள் டிவி  மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின்  ஒயர்களும் அகற்றப்படும் என்றும்,  நிர்ணயிக்கப்பட்ட தொகை  செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  அறிவித்தார் மேயர் சைதை துரைசாமி.

கடந்த  2000 முதல் 2011 வரை   99 லட்சம் மட்டுமே கேபிள் வயர்கள் மூலம் மாநகராட்சிக்கு வருமானம்  கிடைத்தது. ஆனால் சைதை துரைசாமியின் கிடுக்கிப்பிடி நடவடிக்கையினால் வருவாயில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.  52 சேவை சேவை  நிறுவனங்களிடம் இருந்து  15 கோடி  ரூபாய் தடவாடகை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,   14 கோடி ரூபாய்   வசூலிக்கப்பட்டது.  மாநகராட்சிக்கு வருவாயைப் பெருக்கிய மேயர் சைதை துரைசாமியின் திறமையைப் பார்த்து அதிகாரிகளே ஆச்சர்யப்பட்டனர்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment