கேபிள் வயர்கள் புதைப்பதற்குக் கட்டணம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 279

சாலை ஓரங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்கள் பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்பட்டு அப்படியே ஊசலாடிக்கொண்டு இருந்தன. சில இடங்களில் வயர்கள் ரோட்டில் விழுந்து வாகனங்கள் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தன. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை எடுத்தார்.

மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், சென்னையை அழகு படுத்தும் நோக்கிலும் கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு ஒயர்களை பூமிக்கு அடியில் மட்டுமே கொண்டுசெல்லும் வகையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். இதனால் புதிய  நடைபாதைகளிலும், பேருந்து சாலைகளில் புதிதாக  அமைய இருக்கும் கான்கிரீட்  சாலை  தெருவிளக்கு கம்பங்களில் மேல்நிலை வழியாக  கேபிள் எடுத்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது. 

சாலையில் கேபிள் செல்லவேண்டும் என்றால் வேறு எங்கேயும் தோண்டாமல் நடைபாதையில் மட்டுமே புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேநேரம், கேபிள் புதைப்பதற்கு முறைப்படி மாநகராட்சியில் பணம் கட்டி அனுமதிக் கடிதம் வாங்கிய பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு முன்பு வரை மாநகராட்சியை கண்டுகொள்ளாமல் அனைத்து நிறுவனங்களும் தான் தோன்றித்தனமாக தைரியமாக சாலையைத் தோண்டுவதும், வயர்களை இணைப்பதும் நடந்துவந்தது. அதனால், மாநகராட்சி அனுமதியுடன் சாலை தோண்டுபவர்கள் கையில் அதற்கான அனுமதி வைத்திருக்க வேண்டும் என்றும் சாலையை மூடும்போது காங்கிரிட் கலவை போட்டு மூட வேண்டும் என்றும் தெரிவித்தார். அனுமதியின்றி யாரேனும் சாலையைத் தோண்டுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த பிறகே முறைகேடுகள் நிறுத்தப்பட்டன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment