மூக்குத்தி அழகிகள்

Image

யார் முகத்துக்கு எது சரி..?

பெண்கள் விரும்பி அணியும் ஆபரணங்களுள் மூக்குத்திக்கும் தனியிடம் உண்டு.  முகத்தின் அழகை மெருகூட்டுவதே மூக்குதான். அந்த மூக்கிற்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக மூக்குத்தி திகழ்கிறது.

பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு பொட்டு, கண்களுக்கு மை, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்.. போன்று முகத்தில் ஒவ்வொரு உறுப்பையும் அழகு செய்யும் பெண்கள் அந்த வரிசையில் மூக்குக்கு மூக்குத்தி சூடிக்கொள்கிறார்கள்.

மூக்குத்தியின் வரலாறு மிகவும் பழமையானது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களிலும் மூக்குத்திக்கு சிறப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்தினால் அந்த பெண்களுக்கு மாதவிலக்கு கால வலியும், பிரசவ வலியும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெற்றோர், தாய்மாமன், கணவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெண்கள் மூக்குத்தி வாங்க வேண்டும் என்ற நிபந்தனை முன்காலத்தில் இருந்தது. வேறுயாரிடமாவது இருந்து மூக்குத்தியை பெற்றால் அது குற்றமாகவும் கருதப்பட்டது.

மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அனுபவம் வாய்ந்தவர்களிடமே மூக்கு குத்தவேண்டும். நாடி நரம்புகள் பாதிக்காத அளவுக்கு குத்துவது அவசியம். டாக்டர்களும் மூக்கு குத்திவிடுவதுண்டு. பியூட்டி பார்லர்களில் சென்று ‘ஷூட்’ செய்யும் பெண்கள், முதலிலே அவர்களுக்கு அதில் இருக்கும் அனுபவத்தைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

தங்க மூக்குத்தியே சிறந்தது. வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மூக்குத்திகள் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மூக்குத்தி அணிந்ததும் அந்த பகுதியில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இன்று பல்வேறு உலோகங்களை ஃபேஷனாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது நிச்சயம் சிக்கலாகவே முடியும். எனவே, தங்கம் தவிர வேறு மூக்குத்தி வேண்டாம். முழு நேர மூக்குத்தியும் வேண்டாம் என்பதே சரியான பரிந்துரை.

மூக்கு குத்தியதும் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது அந்த பகுதியை தொட்டுப்பார்ப்பார்கள். தொடுவது தவறு. தொட்டால் அந்த காயம் ஆற தாமதமாகும். காயம் முழுவதும் ஆறுவதற்கு முன்பு மூக்குத்தியை கழற்றக்கூடாது. கழற்றினால் அந்த துவாரம் விரைந்து மூடிவிடும்.

மூக்குத்தி அணிபவர்கள் குளித்துவிட்டு தலை துவட்டும்போதும், கூந்தலை சீவும்போதும் கவனம் கொள்ளவேண்டும். துணியோ, முடியோ மூக்குத்தியில் சிக்கிக்கொள்ளும். அது வலி நிறைந்த அவஸ்தையாகிவிடும். மூக்குத்தி அணிந்த காயம் ஆறும்வரை மல்லாந்து படுத்து தூங்கவேண்டும். இல்லாவிட்டால் தலையணை விரிப்பு போன்றவைகளில் மூக்குத்தி பட்டு வலிதோன்றும்.

அகன்ற மூக்கு உள்ளவர்களுக்கு 5 கல் கொண்ட வட்ட மூக்குத்தி அழகை அதிகரித்துக் காட்டும். பேசரியும், மிஸியம்மா மூக்குத்தி எனப்படும் அகலமான மூக்குத்தியும் எடுப்பாய் இருக்கும்.

நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ள மூக்கினை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம். இவர்கள் சங்கு மூக்குத்தி, முத்து மூக்குத்தி போடுவதால் சப்பை மூக்கினை மாற்றிக்காட்டும். கூர்மையான நாசி கொண்டவர்கள் இடது மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி அணிவது முக அழகை அதிகரித்துக் காட்டும்.

முகத்திற்கு ஏற்ற மூக்குத்தி கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும். சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும். குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும். இடது பக்கம் இன்றைக்கு பேஷனுக்காக வலதுபக்கம் மூக்குத்தி அணிகின்றனர். அது தவறானது இடதுபக்கம்தான் மூக்குத்தி அணியவேண்டும் என்று சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வைக் கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்கள் மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அகன்ற மூக்கு உள்ளவர்களுக்கு 5 கல் கொண்ட வட்ட மூக்குத்தி அழகை அதிகரித்துக் காட்டும்.

கூர்மையான நாசி கொண்டவர்கள் இடது மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி அணிவது முக அழகை அதிகரித்துக் காட்டும். கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும். சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும். குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.

Leave a Comment