என்ன செய்தார் சைதை துரைசாமி – 275
அரசியல்வாதிகள் என்றாலே அரசு நிலத்தை சுருட்டுவார்கள், அபகரிப்பார்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை உடைத்துக் காட்டியவர் மேயர் சைதை துரைசாமி. தன்னுடைய மேயர் காலத்தில் மாநகராட்சியில் எந்த இடமும் பறி போய்விடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார். அதோடு தகுதியற்ற வகையில் குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலங்களை எல்லாம் கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கினார்.
மேயர் சைதை துரைசாமி இது குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 524 நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதேநேரம், குத்தகை எடுத்தவர்களிடம் இருந்து 21 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மாநகராட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதற்குப் போதிய நிதி இல்லாமல் தடுமாறும் நிலையில் இத்தனை கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதும், இதனை வசூல் செய்வதற்கு இதுவரை பொறுப்பில் இருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததும் மேயர் சைதை துரைசாமிக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.
குத்தகைக்கு இருப்பவர்களில் நிறைய பேருக்கு அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் இருப்பதால் அவர்களிடம் கறாராக வசூல் செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் கையைப் பிசைந்தார்கள். ஆனால், எந்த காரணத்தையும் ஏற்பதற்கு மேயர் சைதை துரைசாமி தயாராக இல்லை. யாராக இருந்தாலும் சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார். அதோடு அனைத்து மாநகராட்சி கடைகளின் குத்தகையைப் புதுப்பிக்கவும், குத்தகைத் தொகை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேயர் சைதை துரைசாமி குத்தகையில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை நேர்மையான அரசியல்வாதிகள், அதிகாரிகள் இன்று வரையிலும் பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.