பாலங்கள் துறைக்கு மாமன்ற உரை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  268

பெருநகர சென்னைக்கு உருவாக்கப்பட்ட பாலங்களில்  மேயர் சைதை துரைசாமி ஒரு சாதனையே படைத்திருந்தார். அதனை சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பதிவு செய்தார். மேயர் சைதை துரைசாமி ஆற்றிய உரையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

இன்றைக்கு ஒருங்கிணைந்த மேம்பாலம்  அமைக்க நடவடிக்கை மாண்புமிகு அம்மா அவர்களால்  எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, அண்ணா சாலையில் இருந்து மகாலிங்கபுரம் வழியாக லயோலா கல்லூரி வரை பயணிக்கும் ஒருவர் தங்கு தடையின்றி இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் சென்றடைகின்ற வகையில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. அதைப்போலவே,  ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை தடையற்ற போக்குவரத்திற்கும் என பல சந்திப்புகளை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த மேம்பாலம் கட்ட  திட்டமிடப்படுகிறது. ஆக மேம்பாலங்கள் கட்டுவது என்பது மக்களுக்கு பயன் தருகின்ற வகையில் இருக்கவேண்டுமே தவிர, கட்டினோம் என்ற அடையாளமாக அது இருக்கக்கூடாது. பயன்பெற முடியாமல் இருக்கக்கூடாது என்ற வகையிலே தான் இன்றைக்கு மாண்புமிகு  அம்மா அவர்கள் தொலைநோக்கு பார்வையோடு இந்தப் பால திட்டங்களில் மிகுந்த அக்கறை கொண்டு  இன்னும் 20 ஆண்டுகள் கழித்து , இன்னும் 50 ஆண்டுகள் கழித்து, இந்த சென்னை மாநகர்,  கட்டப்படுகின்ற பாலங்களால்  பயன்பெற  வேண்டுமென்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்ட மேம்பாலப்பணிக்கு ரூ.117.47 கோடி மதிப்பீட்டில் எல்சி-2ஏ எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் எல்.சி-2பி மணலி சாலை ரயில்வே சந்திக்கடவுகளை ஒருங்கிணைந்த மேம்பாலமாக  அமைக்க மறு ஒப்பம் 05.08.2016 அன்று கோரப்படவுள்ளது. விரைவில் இந்தப் பணி தொடங்க இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகத்தால் ஆய்வு செய்து 2007-ம் ஆண்டு கைவிடப்பட்ட பணியினை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் புனரமைக்கப்பட்டு கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண்.1ல் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானத்திற்கான மதிப்பீடு ரூ. 24.90 கோடிக்கு தயாராக உள்ளது. சேவைத் துறைகளான சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சாரத் துறையின் தளவாடங்களை மாற்றியமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை மற்றும் பாலத்திற்குத் தேவையான ஐ.சி.எப். நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் குறித்து உறுதி செய்யப்பட்ட பின்னர் வில்லிவாக்கம் கொளத்தூர் பாலப்  பணி தொடங்கப்படும். 

கீழ்க்காணும் முக்கிய சாலை சந்திப்புகளில் நான்கு மேம்பாலங்களும், இரண்டு பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் மற்றும் மூன்று  நடை மேம்பாலங்களும் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயும் பணி நடைபெற்று வருகிறது.

அண்ணா சாலை முதல் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைத்து மகாலிங்கபுரம் வரை  இணைக்கும் ஒருங்கிணைந்த மேம்பாலம்.  ஈகா தியேட்டர் சந்திப்பு முதல் வள்ளுவர் கோட்டம் சந்திப்பு வரை ஒருங்கிணைந்த மேம்பாலம்.  மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம். வேளச்சேரி நெடுஞ்சாலையில் 100 அடி சாலை சந்திப்பு (ம) ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் மேம்பாலம். இரண்டு பாதசாரிகள் சுரங்கப்பாதை (வடபழனி பேருந்து நிலையம் அருகே மற்றும் தலைமை செயலகத்தின் எதிரே ராஜாஜி சாலை) மூன்று நடைமேம்பாலம் (கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே, துர்காபாய் தேஷ்முக் சாலையில் ஆந்திர மகிளா சபா அருகே மற்றும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து தெற்கு பக்கமுள்ள காந்தி இர்வின் சாலை) 2011ல் துவக்க நிலையிலேயே பணி முடிக்கப்படாத நிலையில் விட்டுச் சென்றிருந்த  பணிகளை அதில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக சாலைகள் மற்றும் பாலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, தகுதியானவர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் வழங்கி மற்றும் பல இடர்பாடுகளை அகற்றி,  செப்டம்பர் 2011 முதல்  ஜீலை 2016 வரை அதாவது 58 மாதங்களில் மாண்புமிகு  தமிழ்நாடு  முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.294.28 கோடி மதிப்பீட்டில், பத்திரிகை நண்பர்களின் கவனத்திற்கு.  மொத்தம் 71 பாலப்பணிகள் (5 பெரிய பாலங்கள், 3 சுரங்கப்பாதைகள் உட்பட) எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 114.95 கோடி மதிப்பீட்டில் 37 பாலங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்களை மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 21 பாலப்பணிகள் ரூ.21.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 13 பாலப்பணிகள் ரூ.158.14 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படவுள்ளன.’’ என்று சைதை துரைசாமி மாமன்ற கூட்டத்தில் உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறார். . 

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment