சென்னையில் அதிக எண்ணிக்கையில் பாலங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  263

பெருநகர சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பாலங்களும் அவசியம் என்று முடிவெடுத்த மேயர் சைதை துரைசாமி, ஒவ்வொரு பாலத்தையும் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

மேயராக சைதை துரைசாமி பதவியில் இருந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 71 பாலப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 37 பாலங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்களை மேம்படுத்தும் பணிகள் மிகுந்த தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வேறு எந்த மேயர் காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட பாலங்கள் எண்ணிக்கையை விட மேயர் சைதை துரைசாமி காலத்தில் தான் அதிக எண்ணிக்கையில் பாலங்கள் கட்டப்பட்டன என்பது இன்றும் சாதனையாக இருக்கின்றன.

 மேயர் சைதை துரைசாமி காலத்தில் கட்டப்பட்ட ஒருசில முக்கியமான பாலங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

* ரங்கராஜபுரம் ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகன மேம்பாலம்

* தங்கசாலை சந்திப்பில் வள்ளலார் நகர் மேம்பாலம்.          

* கத்திவாக்கம் நெடுஞ்சாலை  காக்ரேன் பேசின் சாலையில் மேம்பாலம்               

* மேத்தா நகர் ஆபீசர்ஸ் காலனி முதல் தெருவை வெங்கடாசலபதி தெருவுடன் இணைக்கும் பாலம்

* பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே  இந்திரா நகர் 2வது நிழற்சாலையையும்  ராஜீவ்காந்தி சாலையையும்  இணைக்கும்  பாலம்.

* விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே  பாரி தெருவில்  வாகனப்பாலம்.

* விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே சின்மயா நகர் காளியம்மன் கோயில் தெருவில் ஏற்கனவே உள்ள பாலத்திற்கு அருகில் புதிய பெட்டக வடிவ பாலம். 

* எழில் நகரில் சோலையம்மன் கோயில் தெருவில் பெட்டக வடிவ பாலம்       

* எம்.கே.பி.நகரையும் கிருஷ்ணமூர்த்தி நகரையும் இணைக்கும் பாலம் 

* பாபா நகர் ஆர்.கே.லிங்க் சாலையில் பெட்டக வடிவ பாலம்.            

* சூழ்புனல்கரை, டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெட்டக வடிவ பாலம்.           

* நாராயணபுரத்தில் பெட்டக வடிவ பாலம்.

* ஜெ.ஜெ.நகர், பாடிக்குப்பம் சாலையில் பாடிக்குப்பம் கால்வாய் குறுக்கே தற்போதுள்ள கீழ் மட்டப் பாலத்திற்கு மாற்றாக பெட்டக வடிவ பாலம்.

* ஓட்டேரி கால்வாயின் குறுக்கே  எம்.எஸ். நகரையும் நரசிம்ம நகரையும் இணைக்கும் பாலம்.         

* மாட்டாங்குப்பம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே திருவல்லிக்கேணி (எம்.ஆர்.டி.எஸ்.) ரயில் நிலையம் மற்றும் கெனால் சாலையை இணைக்கும் நடை மேம்பாலம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

– நாளை பார்க்கலாம்.

Leave a Comment