• Home
  • யாக்கை
  • குளிரில் தலை காட்டினால் நோய் வருமா?

குளிரில் தலை காட்டினால் நோய் வருமா?

Image

மருத்துவ உண்மை

குளிர் காலத்தில் வெளியே போய் திரும்பினாலே ஜூரம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உலவுகிறது. உண்மை என்னவென்றால் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகள் பரவுவதற்கு குளிர் காலம் ஏதுவாக இருக்கிறது. மூக்கு மற்றும் மூச்சுக்குழாய் பாதை குளிர் காலத்தில் உலர்ந்திருப்பதால் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. அதோடு குளிர் காலத்தில் வைரஸ் போன்ற தொற்றுகள் அதிக வீரியத்துடன் நீடித்திருக்கும் என்பதாலே ஃப்ளு போன்ற பாதிப்புகள் அதிகம் தென்படுகிறது.

குளிர் காலத்தில் வெளியே போய்விட்டு வந்ததும் கைகளை நன்றாகக் கழுவுதல் வேண்டும். சானிடைசர் போட்டு கழுவுவது நல்லது. ஆடைகளில் ஈரம் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவுக்கு சத்தான உணவு எடுத்துக்கொள்வது நல்லது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் அடிக்கடி நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் என்றால் ஃப்ளூவுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.

Leave a Comment