• Home
  • தமிழ் லீடர்
  • பெரியார், சீமான் விவகாரத்தில் யார் பக்கம் நிற்க வேண்டும்..?

பெரியார், சீமான் விவகாரத்தில் யார் பக்கம் நிற்க வேண்டும்..?

Image

உண்மையான எதிரி யார்?

தமிழக அரசியலில் எக்கச்சக்க திருப்பங்கள் நடந்துவருகின்றன. திராவிட மாடல் அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளைக் கிளப்பிவருகிறார்கள். இந்த நேரத்தில் பெரியாரின் காம இச்சை குறித்து சீமான் ஒரு பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.

ஏன் இப்போது இந்த பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக மக்கள் இருக்க வேண்டும்..?

இதற்கு பெரியாரே பதில் சொல்லியிருக்கிறார். பெரியார் என்ன சொன்னார் என்பதைப் பார்க்கலாம்.

’வலிமையான நாடு வலிமைகுறைந்த நாட்டை ஆக்கிரமிக்க நினைக்குமேயானால் நான் “ஒடுக்கப்படும்” நாட்டின் பக்கம் நின்று பெரிய நாட்டை எதிர்ப்பேன். அந்த வலிமை குறைந்த நாட்டில் ஒரு பெரிய மதமிருந்து அது மற்ற மதங்களை “ஒடுக்குமானால்” நான் அந்த பெரிய மதத்தை எதிர்த்து போராடுவேன்.

அந்த சிறு மதங்களில் சாதி இருந்து அதில் மேல் சாதிக்காரன் சிலரை கீழ் சாதியென “ஒடுக்கினால்” நான் கீழ்சாதிக்காரன் பக்கம் நின்று மேல்சாதிக்காரனை எதிர்ப்பேன் அந்த கீழ்சாதிக்காரன் ஒரு தொழிற்சாலை நடத்தி ஒரு முதலாளியாக நின்று தொழிலாளிகளின் “உரிமையை பறிப்பானேயானால்” நான் தொழிலாளி பக்கம் நின்று முதலாளியை எதிர்ப்பேன்.

நான் உழைப்பவன் என்கிற பெயரில் அந்த தொழிலாளி வீட்டில் பெண்ணை “ஒடுக்குவானேயானால்” நான் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் இருந்து அந்த தொழிலாளியை எதிர்ப்பேன்..’’ என்று கூறியிருக்கிறார்.

இன்றைக்கு யாரை எதிர்த்துப் போராட வேண்டுமோ அதை செய்யாமல், பெரியார் விவகாரத்தை வைத்து திசை திருப்புபவர் யார் என்பதைப் புரிந்துகொண்டு, பாதிக்கப்படும் பக்கம் நின்று ஆதரவு கொடுக்க வேண்டும்.

Leave a Comment