ஒரே மேடை ஒரே குடும்பம். சபாஷ் ராமதாஸ்

Image

நீரா பானத்துக்குக் கோரிக்கை

திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஒரே மேடையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், செளமியா அன்புமணி ஆகிய மூன்று பேரும் அமர்ந்த விவகாரம் பாட்டாளி மக்களை உஷ்ணமாக்கியுள்ளது

என் கட்சிக்குள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று அறிவித்த டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், அவரது மகன், மருமகள், பேத்தி என எல்லோரும் இப்போது அரசியலில் நுழைந்துவிட்டார்கள். அரசியலில் நுழைவது மட்டுமின்றி, ஒரே மேடையில் அத்தனை பேரும் அமர்ந்து தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும். நீர்நிலைகளைத் தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும். தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்கத் தனி வாரியம் அமைக்க வேண்டும். உழவர்களின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; வட்டி மானியம் வழங்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ரூ.3,500, கரும்புக்கு டன் ரூ.5,000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் கொள்முதல் விலை வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் வகையில் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்னைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்துப் பரிந்துரைக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிய தி.மு.க அரசுக்குக் கண்டனம். வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் ஆவணமாக தமிழக அரசு வெளியிட வேண்டும். உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக, ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்…’’ என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 நீரா பானத்தை வணிக அடிப்படையில் விற்பனை செய்யத் திட்டம் வகுக்க வேண்டும். நியாயவிலைக்கடைகளில் நாட்டுச் சர்க்கரை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்