சென்னையில் பேவர் இயந்திரம் அறிமுகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 228

மக்கள் நன்மைக்கு புத்தம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் ஆர்வமாக இருந்தார். அனைத்துத் துறைகளிலும் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் மூலம் அறிந்துகொள்வார். அந்த புதிய தொழில்நுட்பம் மூலம் நன்மை கிடைக்கும் என்பது தெரியவந்தால் உடனடியாக அதனை எப்படியாவது அறிமுகம் செய்துவிடுவார்.

அப்படித்தான் சென்னைக்கு சாலைகள் அமைப்பதற்கு பேவர் இயந்திரங்களை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார். பொதுவாக சூடான தார்க் கலவையைப் பரப்பி வேலை செய்வது சாலைத் தொழிலாளர்களுக்கு ரொம்பவே சவாலான பணி. அதுவும் வெயில் காலங்களில் இந்த வேலையை செய்வது தொழிலாளர்களுக்கு மிகவும் துன்பம் தரக்கூடியதாக இருக்கும். இந்த தொழிலாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பேவர் இயந்திரங்கள் சாலை போடுவதற்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் சாலைகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்கப்பட்டன.

தொழிலாளர்கள் எத்தனை சிரத்தை எடுத்து பணியாற்றினாலும் சாலை போடுவதில் சிறு மேடு, பள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த மனிதக் குறையை தீர்க்கும் வகையில் பேவர் இயந்திரம் செயல்பட்டன. இந்த இயந்திரம் மூலம் போடப்படும் சாலைகள் சீராக இருந்தன. எந்த குறையும் இல்லாமல் மிகத் தெளிவாகவும் தரமாகவும் சாலை அமைக்கப்பட்டது. ஒரே நாள் இரவில் ஒரு சாலையை புதுப்பிக்க முடியும் என்பது மக்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஏனென்றால், புதிய சாலைகள் போடுவது என்றால் முன்கூட்டியே சாலையோரம் கற்களைக் கொட்டிவைத்து தார் டின்களை நிற்கவைத்து, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு நிகழ்வது சகஜமாக இருந்தது. இந்த சிக்கல் எல்லாம் பேவர் இயந்திரத்தால் தீர்ந்துபோயின. தரமாகவும், வேகமாகவும் சாலை போடும் பேவர் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய மேயர் சைதை துரைசாமிக்கு மக்களிடமும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment