சென்னையில் சாய்தள சாலைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 227

பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த காலகட்டத்தில் சாலை அமைப்பில் ஏகப்பட்ட புதுப்புது மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. புதிய தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டன. தெருக்களின் உயரத்தை அதிகரிக்காமல் சீராக வைத்திருக்கும் வகையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டன. அதேபோல் அதிக போக்குவரத்து நிரம்பிய சாலைகள் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கெல்லாம் கூடுதல் தரத்துடன் சாலைகள் போடப்பட்டன.

அதேபோன்று, மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையின் பேரில், சென்னை மாநகராட்சியில்  முதன் முறையாக சாய்தள அமைப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  எல்லா சாலைகளும் ஒரே மட்டத்தில் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த சாலைகளில் சின்னச்சின்ன பள்ளங்கள், குழிகள் உருவாவதும், அவற்றில் மழை நீர் தேங்குவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.

அதன்படி, சாலையின் இரண்டு பக்கமும் கொஞ்சம் சாய்தளமாக அமைக்கப்பட்டன. உன்னிப்பாகப் பார்த்தால் தவிர இந்த வித்தியாசம் கண்களுக்குத் தெரியாது. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் பயன் சிறப்பாக இருந்தது. சாய்தளமாக சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாக சாலையின் மையத்தில் மழை நீர்  தேங்கி நிற்பது தடுக்கப்பட்டது. எத்தனை மழைப் பொழிவு என்றாலும் தண்ணீர் சாலையின் இருபுறமும் வடிந்து ஓடும் விதமாக சாலைகள் அமைக்கப்பட்டன.

அதேபோல், முதன்   முறையாக  9 மீட்டர்  (30 அடி) அகலம் கொண்ட எலக்ட்ரானிக் சென்சார்  பேவர்  இயந்திரம் மூலம் சாலைகள்  அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனால் சாலைகளின்  மேற்பரப்பு  சீராகவும், தரமாகவும்  அமைந்தன.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment