சாலைப் பணிகளில் ஒருங்கிணைப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 219

சாலையை புதிதாகப் போட்டுவிட்டார்கள் இனி பயணம் சுலபமாக இருக்கும் என்று மக்கள் எண்ணுவதற்குள், அந்த சாலையை ஏதாவது ஒரு துறையினர் தோண்டிப் போட்டு, அதை சரியாக மூடாமல் சிக்கலாக்கிவிடுவது சென்னையின் சாபமாகவே இருந்துவந்தது. இந்த காரணங்களால் புதிய சாலையின் பயன் முழுமையாக மக்களுக்குக் கிடைக்கவே இல்லை. 

இந்த நிலையை எப்படி மாற்றுவது என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. அதாவது அரசு இயந்திரத்தின் அனைத்து துறையினரும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே இதனை தடுக்க முடியும் என்பது தெரியவந்தது. ஆகவே, புதிய சாலையில் யாரும் தோண்டக்கூடாது என்பதற்காக அனைத்து துறையினரும் ஒன்றுசேர்ந்து பணியாற்றும் வகையில் புதிய திட்டத்தை மேயர் சைதை துரைசாமி உருவாக்கினார்.  

 சென்னை மாநகராட்சி வரலாற்றில்  முதன்முறையாக, பெருநகர வளர்ச்சித் திட்டத்தின்  மூலம்  சாலைப் பணியில், கீழ்க்கண்ட பணிகளும் ஒருங்கிணையும் வகையில் திட்டமிடப்பட்டது.

  •  நடைபாதை அமைத்தல்
  •  மழைநீர் வடிகால்வாய் அமைத்தல்
  •  எல்.இ.டி தெரு விளக்குகள் அமைத்தல்
  • கம்பி வடங்கள் செல்வதற்கு பிரத்யேக வழித்தடம்

இந்த சாலைப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் திட்ட மேலாண்மை ஆலோசகர் எனப்படும் பிராஜெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைப் பணியை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டியது இவரது பணியாகும். சென்னை மாநகராட்சி வரலாற்றில் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட இப்படியொரு சீர்திருத்த நடவடிக்கையை வேறு யாரும் எடுத்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment