பரபரப்பூட்டும் ஆய்வு
வரும் 2026 தேர்தலை சந்திப்பதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். எதிர்க் கட்சிகளிடம் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேநேரம், தி.மு.க.வை கூட்டணியை உடைப்பது மட்டுமே வெற்றிக்கு வழி என்ற மனப்பான்மைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வந்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி வலை விரித்தபோது அதில் இருந்து நழுவி விட்டார் திருமாவளவன். இப்போது பா.ஜ.க. விஜய் மூலம் வலை வீசுகிறது என்கிறார்கள். இது குறித்துப் பேசும் தி.மு.க.வினர், ‘’நாம் தமிழர் சீமான் போலவே தமிழக வெற்றிக் கழகம் விஜய்யும் பாஜகவால் மட்டுமே இயக்கப்படுகின்றனர். இவர்களின் உருவாக்கம் மற்றும் அடைக்கலம் பாஜக என்றால் கண்டிப்பாக எவ்வித மாற்றுகருத்தும் இல்லை.
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் தற்போது ஆளும் கட்சி மீது மக்கள் கோபமாக விரக்தியில் இருக்கிறார்கள் என்ற எதிர்ப்பு மாய தோற்றத்தை இப்போதே மதவெறி கொண்ட பாஜக இந்த தீய சக்திகளான எவ்வித கொள்கையும் இல்லாத கூத்தாடிகளை தலைவனாக கொண்ட இரு கட்சிகளை வைத்து போலியான பிம்பத்தை உருவாக்குகிறது.
இது எதற்காக என்றால் 2026 தேர்தலில் போலியாக தேர்தல் ஆணையம் மூலம் வெற்றி பெறும் போது தமிழ்நாடு மக்களுக்கு எவ்வித சந்தேகமும் வரக்கூடாது என்றும் அவர்கள் நாளடைவில் போராட்டம் புரட்சி என்பதை உருவாக்க கூடாது என்பதை மனதில் கொண்டு வரும் 2026 தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு தமிழ்நாட்டில் ஒரு போலியான மோசடி வெற்றியை உருவாக்க இப்போதே தன்னை பாஜக தயார் படுத்தி கொள்கிறது.
இப்படி வரவழைக்க ரஜினியை திட்டம் தீட்டி அதற்கு அவர் முடியாது என்ற நிராகரிப்பிற்கு பிறகுதான் தற்போது விஜய் என்ற கூத்தாடியால் பாஜக இந்த சதி திட்டத்தை அரங்கேற்றி இருக்கிறது.. மக்களும் தி.மு.க.வும் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது என்கிறார்கள்…’’
அப்படியென்றால் நடிகர் விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.