கடற்கரையில் வளர்ந்த மரங்கள் நடும் திட்டம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 215

மெரினா கடற்கரையை பகுதியை உலகத்தரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை யோசித்து செயல்படுத்தினார் மேயர் சைதை துரைசாமி. அவற்றில் முக்கியமான ஒன்று வளர்ந்த மரங்களைக் கொண்டுவந்து நடுவது ஆகும்.

மேலை நாடுகளில் மரங்களை வெட்டுவது என்றால், அதனை அப்படியே வேரோடு புடுங்கி வேறு இடத்தில் நடுவார்கள். அந்த முறையை சென்னைக்குக் கொண்டுவந்தவர் மேயர் சைதை துரைசாமி. நெசப்பாக்கத்தில் இணைப்பு சாலை கொண்டுவந்த நேரத்தில் பம்பிங் ஸ்டேஷன் உள்ளே இருந்த பசுமையான மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட நேரத்தில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார். அதனால், ஒரு மரம் கூட வெட்டப்படாமல் பசுமையான மரங்கள் அத்தனையும் காப்பாற்றப்பட்டன.

மெரினாவை அழகுபடுத்துவதற்கு மரம் நடுவதற்குத் திட்டமிடப்பட்டன. அப்போது யாரும் செய்யாத ஒரு புதுமையைச் செய்தார். அதன்படி உப்புக்காற்றினால் பாதிக்கப்படாத 25 முதல் 30 அடி வரை வளர்ந்த 210 மரங்கள் மெரினா கடற்கரை சாலையில் வரிசையாக நடப்பட்டன. இப்படி வளர்ந்த மரங்களை சாலைகளில் நட்டு வளர்ப்பதன் மூலம் நேரான, சீரான மரங்கள் அழகாகக் காட்சியளிக்கும். மேலும், ஒரு மரம் வளர்ந்து பலன் தருவதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். அதேநேரம், இப்படி வளர்ந்த மரம் நடப்படுவதால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பலன்களை இப்போதே பெற்றுக்கொள்ள முடியும்.

நேராக வளர்ந்த மரமாக இருப்பதால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது. இப்படியொரு முன் மாதிரி திட்டத்தை யாரும் யோசித்தது கூட இல்லை என்பதுடன் இவற்றை எல்லாம் தன்னுடைய சொந்த செலவில் மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்து நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன என்றாலும் சைதை துரைசாமியின் சாதனையை யாரும் மறைக்க முடியாது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment