கை கொடுக்கும் சீமான் தம்பிகள்
வழக்கமாக ஆளும் தி.மு.க.வை மட்டும் போட்டுப் பொளக்கும் அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பிய பிறகு ஆளே மாறிவிட்டார். நேற்று முளைத்த கட்சியைப் பார்த்து பா.ஜ.க. பயப்படாது என்று ஏர்போர்ட்டில் வைத்து விஜய்யைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
அதன்பிறகு நடைபெற்ற மீட்டிங்கில் பேசிய அண்ணாமலை, ‘’எல்லா தலைவர்களின் படங்களையும் போட்டு எல்லா சித்தாத்தங்களையும் போட்டுக் கிச்சடி அரசியல் செய்கிறார்கள். ரசம்னு சொல்லுங்க இல்லைன்னா தயிர் சாதம்னு சொல்லுங்க. எல்லாத்தையும் கலந்தா எப்படி சாப்பிட முடியும். இப்படி கிச்சடி அரசியல் தமிழகத்தில் எடுபடாது’’ என்று பேசினார்.
இதே பாணியில் சீமான், ‘’ஒண்ணு சாம்பாருன்னு சொல்லு இல்லைன்னா கருவாடுன்னு சொல்லு. அதென்ன கருவாட்டு சாம்பார்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது சீமான் பாணியில் அண்ணாமலை விஜய் மீது பாய்ந்திருப்பது விஜய் ஆதரவாளர்களை கடும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது. ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க முடியாத சீமானும் அண்ணாமலையும் சேர்ந்துகொண்டு எங்களை மிரட்டப் பார்க்கிறீர்களா..? உங்களை கதறவிடுகிறோம் என்று மிரட்டுகிறார்கள். லொள்ளு தாங்கலையேப்பா. இனிமே தமிழகத்தில் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இருக்காது