• Home
  • அரசியல்
  • உதயநிதி இத்தனை கொண்டாட்டத்துக்குத் தகுதியானவரா..?

உதயநிதி இத்தனை கொண்டாட்டத்துக்குத் தகுதியானவரா..?

Image

எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று தூள் பறக்கிறது. மூத்த அமைச்சர் தொடங்கி சாதாரண லோக்கல் நிர்வாகி வரை வந்து வாழ்த்துகிறார்கள். அடுத்த முதல்வரை அடையாளம் கண்டுகொண்டுவிட்டதால் தி.மு.க. ரொம்பவே உற்சாகமாக இதனை கொண்டாடுகிறது.

அதேநேரம், எதிர் அணியில் பெரும் புகைச்சலை இந்த கொண்டாட்டம் உருவாக்கியிருக்கிறது. ‘’எக்கச்சக்கமாக வசூல் செய்து பிரியாணி விருந்து வைத்து அவமானம் செய்கிறார்கள்’’ என்று புலம்புகிறார்கள். அதோடு பா.ஜ.க.வினர், ‘’எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மொட்டை வெயிலில் நின்று உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுமளவிற்கு நீங்கள் என்ன தேசம் போற்றும் தியாகியா? நாடு கண்ட நல்லவரா? அல்லது உலகப் புகழ்பெற்ற உத்தமரா? தந்தையின் சிபாரிசில் சொகுசாக துணை முதல்வர் பதவி வாங்கியவர் அவ்வளவுதானே? தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற கட்டாயப்படுத்தியுள்ள, அன்பில் மகேஸ்அடியாட்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.’ என்று கொதிக்கிறார்கள்.

அதேநேரம், இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத உதயநிதி, ‘’பிறந்த நாளை மக்களுக்கு பயன்படும்படி அமைத்துக் கொள்வது நம் திராவிட இயக்கத் தலைவர்களின் வழக்கம். அவர்களின் வழியில், நம்முடைய பிறந்த நாளான இன்று, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் கழகத்தின் 100 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றோம். மேலும், கல்லூரி மாணவ – மாணவியர் 250 பேருக்கு கல்வி உதவித்தொகை, 375 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், 50 மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 100 திருநங்கைகளுக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என சுமார் 1400 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பெரியார் திடலில் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கி மகிழ்ந்தோம்’’ என்று கூறியிருக்கிறார்.

அதுசரி, உண்மையில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குத் தகுதியானதா..?

உதயநிதியிடம் ஒரு திறமை இருக்கிறது. அதாவது எதிரிகள் கண்களுக்கு மிகவும் சாதாரணமாகத் தெரிவார். ஆனால், அவர்களை மிக மோசமாகத் தாக்கிவிடுவார். அதற்கேற்ப இவருடைய திட்டங்களும், கடின உழைப்பும், அதை செயலாக்கும் விதமும் இருக்கிறது. இளைஞர் அணி பேச்சுப்போட்டி துவங்கி செஸ், செங்கல் வரை ஆயிரம் எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். அதனாலே, இவரை குறி வைத்து வீழ்த்த முடியாமல் எதிர்க்கட்சிகள் தடுமாறுகிறார்கள்.

தவிர்க்க முடியாத இடத்துக்கு உதயநிதி சென்றுவிட்டார் என்பது மட்டும் உண்மை.

Leave a Comment