ஊழலை ஒழித்துக் கட்டிய மோடிஜி

Image

சூப்பர் திருப்பம்

பா.ஜ.க.வை போன்று பரிசுத்தமான கட்சி எதுவும் இல்லை. நாங்கள் ஊழல் குற்றசாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடி அரசு இன்னொரு பரிசுத்த காரியத்தை இன்று செய்திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் அமைச்சர் ஆன கைலேஷ் கெலாட் பாஜகவில் இணைந்த்ருக்கிறார். இவர் மீது தான் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என பல்வேறு அமைப்புகள் தொடர் சோதனைகள் நடத்தன. டெல்லியில் ஆயிரம் தரைத்தள பேருந்துகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக இவரை சுட்டிக்காட்டி தான் பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பா.ஜ.க. வாஷிங் மூலம் இப்போது இவர் நேர்மையானவரும் நல்லவருமாக மாறிவிட்டார். ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு இப்படியொரு காரியம் செய்வதில் மோடிக்கு நிகர் மோடிஜிதான்.

என்ன மோடிஜி இப்படி பண்றீங்களே… ஜனநாயகத்தைப் பார்க்கப் பாவமாக இல்லையா?

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்