காவேரி வில்லங்கம்
டாக்டர் பாலாஜி அரசு மருத்துவமனையில் தாக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. அவருக்கு ஆதரவாக மருத்துவர்களும் சமூக நீதிப் போராளிகளும் களத்தில் நிற்கிறார்கள். இந்த நிலையில் டாக்டர் பாலாஜி அரசு மருத்துவமனையை விட காவேரி மருத்துவமனையில் தான் அதிக நேரம் பணியாற்றுகிறார் என்பதும் அதனாலே வெறுப்புடன் அரசு மருத்துவமனை நோயாளிகளுடன் நடந்துகொள்கிறார் என்பதும் பரபரப்புச் செய்தியாகியுள்ளது.
சென்னையின் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி ஒரு முக்கியமான மருத்துவராக இருக்கிறார். அதனால் தான் அரசு மருத்துவமனை நோயாளிகலை கண்டுகொள்வதே இல்லை என்றும் அலட்சியம் காட்டினார் என்றும் சொல்லப்படுகிறது.
அரசு மருத்துவர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் வேறு மருத்துவமனையில் பணியாற்றலாம். ஆனால், அதை விளம்பரப்படுத்துவதற்கு அனுமதி இல்லை. ஆனால், டாக்டர் பாலாஜி படத்துடன் காவேரி மருத்துவமனை நிறைய விளம்பரம் செய்கிறது. எனவே, பாலாஜிக்கு அரசு மருத்துவமனையில் டபுள் ஷிஃப்ட் போடுங்க என்று பலரும் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார்கள்.
காவேரி என்ற தனியார் மருத்துவமனையில் வாங்கிய கோடிக்கணக்கான சம்பளத்தை விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசாங்க உத்தியோகத்திற்கு வந்தாரா அல்லது அரசாங்க வேலையில் இருந்து கொண்டே காவிரி மருத்துவமனையிலும் இருந்தாரா என்பதை சுகாதாரத்துறை விளக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள், ‘’அரசு மருத்துவர் என்றாலே சரியாக வேலை செய்வதில்லை என்ற எண்ணம் மக்களிடம் நிரம்பியிருக்கிறது. அதனாலே அரசு மருத்துவர்களை நோயாளிகள் மதிப்பதில்லை. இந்த காரணத்தாலே மருத்துவர்களும் நோயாளிகளை கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்.
தனி மனிதரின் கோபத்துக்கு ஒட்டுமொத்த மருத்துவர்களயும் குற்றம் சாட்டுவது பரிதாபமே.