ஊழல் பட்டியலுக்கும் கிண்டல்
நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை எல்லாம் நடிகர் விஜய் அள்ளிக் கொள்வார் என்பதால் இரண்டு கட்சிக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர் நடக்கிறது. தி.மு.க.வின் ஊழல் பட்டியலைத் தயார் செய்யப் போவதாக வரும் விஜய் கட்சியின் அறிவிப்பும் அவரது கட்சிப் பெயருக்கும் நாம் தமிழர் கட்சி கடும் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘உனக்குத் தான் இனம், மொழி, ஜாதி, மதம் எல்லாம் ஒன்றுதான்னு சொல்றியே… அப்படின்னா ஏன் தமிழக வெற்றிக் கழகம்னு பேர் வச்சிருக்கே, உலக வெற்றிக் கழகம்னு வச்சிருக்கலாமே. உனக்குத்தான் ஆந்திரா, கேரளா, கர்நாடகம்னு எல்லா இடத்திலேயும் ரசிகர்கள் இருக்காங்களே. ஓட்டு வாங்குறதுக்கு மட்டும் தமிழகம் தேவைப்படுதா?’ என்று ஒரு குண்டக்கமண்டக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தி.மு.க.வின் ஊழல் பட்டியலைத் தோண்டியெடுப்பதாக விஜய் கட்சியினரின் அறிவிப்புக்கு சாட்டை துரைமுருகன், ‘ஆமா இவரு பெரிய விஜிலென்ஸ் ஆபிசர் புதுசா வந்து கண்டுபிடிக்க போறாரு ! அந்த ஊழல் பணத்தில் பீஸ்ட் படம் வரைக்கும் சம்பளம் வாங்கும்போது தெரியலையா? பூமர்தனமா இருக்கு ப்ரோ…’’ என்று கிண்டல் செய்கிறார்.
ஸ்லோனின் தாயார் தவெ.க.வில் சேர்ந்தது குறித்து இடும்பாவனம் கார்த்தி, ‘’தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான தங்கை ஸ்னோலினின் தாயார் அம்மா வனிதா அவர்கள் சகோதரர் விஜய்யின் தவெகவில் இணைந்த செய்தியைக் கண்டேன். அம்மாவின் அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகளும், அன்பும்! அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய அதிமுகவை, எடப்பாடி பழனிச்சாமியை இன்றளவும் சகோதரர் விஜய்யும், அவரது இயக்கமும் விமர்சிக்க மறுப்பதும், ‘அதிமுகவுடன் கூட்டணியின் இணைந்தால் பயனளிக்குமா?’ எனும் யோசனையில் சகோதரர் விஜய் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..’’ என்று பேசியிருக்கிறார்.
அண்ணன் பேச்சு ஒரு காலத்தில் தீயா இருக்கும் இப்ப ஏன் இப்படி? என்று நாம் தமிழர்களின் தம்பிகள் அதிர்ந்து நிற்கிறார்கள்.