என்ன செய்தார் சைதை துரைசாமி – 192
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமில்லாத சேத்துப்பட்டு ஏரியை சீரமைப்பு செய்வதற்கு மேயர் சைதை துரைசாமி காட்டிய ஆர்வம் காரணமாக மீன் வளத்துறை அமைச்சகத்துக்கும் மாநகராட்சிக்கும் தேவையில்லாத சிக்கல் உருவாகும் என்றே அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால், நடந்ததே வேறு.
சேத்துப்பட்டு ஏரியை புனரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் குறித்து அன்றைய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலிடம் மேயர் சைதை துரைசாமி பேசியதுமே, அவர் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். மேயர் சைதை துரைசாமி தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் சேத்துப்பட்டு ஏரி புனரமைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை அமைச்சர் ஜெயபாலும் மேயர் சைதை துரைசாமியும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்கள்.
சேத்துப்பட்டு ஏரியை இப்படியெல்லாம் சீரமைப்பு செய்ய இயலுமா என்று திட்டத்தைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா ஆச்சர்யப்பட்டு உடனடியாக ஒப்புதல் கொடுத்தார். அதோடு, யாருக்கும் பயனில்லாத சேத்துப்பட்டு ஏரி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலாஸ்தலமாக விரைவில் மாற்றப்படும் என்று சட்டப்பேரவையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிவிக்கவும் செய்தார். இதையடுத்து இந்த திட்டத்தை அமைச்சரும் மேயரும் இணைந்து செயல்படுத்தத் தொடங்கினார்கள்.
மழைக் காலங்களில் நீர்பிடிப்புப் பகுதியாக உள்ள இந்த சேத்துப்பட்டு ஏரி, நீர் நிரம்பியதும் வீணாக கடலில் சென்று கலந்துவந்தது. அதனை தடுத்து நிறுத்தும் வகையில் கரைகளை பலப்படுத்தி கூடுதல் கொள்ளளவு நீர் பிடிப்புக்கு உறுதி செய்யப்பட்டது. எந்தக் காரணம் கொண்டும் நீர் நிறைந்தபிறகு ரோட்டுக்கு அல்லது மருத்துவமனைக்குள் நுழைந்துவிடாதபடி, முறையாக மழை நீர்க் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முதல் நடவடிக்கையே இந்த பகுதி மக்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
- நாளை பார்க்கலாம்.