சீமானை 15 முறை சந்தித்தாரா விஜய்..?

Image

உண்மையைச் சொல்லுங்க ப்ரோ

என் தம்பி அரசியலுக்கு வர வேண்டும், என் தம்பியுடன் கூட்டணி சேர்வதில் எனக்குப் பெருமை, தம்பியின் அரசியல் வருகை வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றெல்லாம் மாநாடு நடக்கும் வரையிலும் விஜய்க்கு வாழ்த்துக்களை அள்ளி வீசினார் நாம் தமிழர் சீமான். ஆனால், விஜய் கொள்கையை அறிவித்ததும் லாரியில அடிபட்டு செத்துடுவ என்று கடுமையாக எதிர்க்கிறார்.

ஏன் இந்த மனமாற்றம் என்பதற்கு விடை கூறுகிறார் இயக்குனர் களஞ்சியம். அதாவது, ‘’மாநாட்டுக்கு முன்பு சுமார் 15 முறை சீமானை சந்திப்பதற்கு விஜய் வந்தார். இருவரும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள். அரசியல் என்றால் எப்படியிருக்கும் என்பது பற்றி விளக்கம் கொடுத்தார். இருவரும் பேசிக்கொண்டே மகாபலிபுரம் வரையிலும் காரில் சென்று திரும்புவார்கள். அந்த நம்பிக்கையில் தான் விஜய் கூட்டணிக்கு வருவார் என்று சீமான் அழைப்பு கொடுத்தார். ஆனால், காரியம் முடிந்ததும் கழட்டுவிடும் நபராக விஜய் இருப்பார் என்பதும், தவறான கொள்கையின் பக்கம் நிற்பவர் என்பது தெரிந்ததும் எதிர்க்கிறோம்’’ என்று தெரிவிக்கிறார்.

ஆனால், விஜய் கட்சியினரோ, ‘’சீமானை 15 முறை விஜய் சந்தித்தார் என்று களஞ்சியம் சொல்வது ஒரு வடிகட்டிய பச்சை பொய். விஜய் வீட்டில் தான் சீமான் விஜய்யை சந்தித்தார் விஜய் வீட்டிற்கும் சீமான் வீட்டிற்கு 2 கிலோ மீட்டர் தான் தொலைவு, அந்த சந்திப்பு முடிந்ததும் விஜய் சீமானை அவரது காரில் கொண்டு வந்து சீமானை அவரது வீட்டிலே இறக்கி விட்டிருக்கிறார், இந்த நம்பிக்கையில் சீமானே தம்பி என்னுடன் கூட்டனிக்கு வருவார் நான் சொல்வதை கேட்டு கொண்டு செயல்படுவார் என்று மனக்கணக்கு போட்டு விட்டார், ஆனால் விஜய் மிகவும் தெளிவாக சீமானை தவிர்த்து விட்டார் களஞ்சியம் செல்வது பச்சை பொய்’’ என்கிறார்கள்.

சீமான் சர்வசாதாரணமாகப் பொய் பேசுவார் என்பது எல்லோருக்கும் தெரியும்… விஜய் எப்படின்னு போகப்போகத் தெரியவரும்.

Leave a Comment