என்ன செய்தார் சைதை துரைசாமி – 168
மேயராக சைதை துரைசாமி மாநகராட்சிப் பள்ளிகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் கொண்டுவந்தார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால், மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை உயர்வு, மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு போன்ற அத்தனையும் ஆதாரமாக இருக்கின்றன. மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்பதற்கு உதவியாக இருக்கிறார். கல்வி என்றால் எதுவும் செய்வார்
கரூர் – தாராபுரம் ரோட்டில் தும்பிவாடி என்ற கிராமத்தில் தான் சைதை துரைசாமி பிறந்தார். அந்த ஊர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தாம் உயர்த்துவதற்கு காப்புத்தொகை கட்டுவதில் பிரச்னை இருந்தது தற்செயலாக சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. யாரும் உதவி கேட்காத நிலையில் தானாகவே முன்வந்து அதற்கான முழுத் தொகையையும் கட்டினார் சைதை துரைசாமி.
அடுத்தபடியாக அந்தப் பள்ளிக்கு கட்டிடம் கட்டவேண்டிய சூழல் வந்தபோது, அப்போது எம்.பி-யாக இருந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் எம்.பி. நிதியில் இருந்து 50 லட்சம் பெற்றுக்கொடுத்தார். அதேபோன்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி. நிதியில் இருந்தும் 50 லட்சம் பெற்றுக்கொடுத்தார். சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாகவே தும்பிவாடி கிராமத்தில் கல்விப் புரட்சி நிகழ்ந்தது என்று கிராம மக்கள் இன்றும் பெருமைப்படுகிறார்கள்.
அதேபோன்று தும்பிவாடியில் அரசு மருத்துவமனை ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும், இடம் தேர்வு செய்வதில் பிரச்னை இருந்தது. உடனே தன்னுடைய சொந்த இடத்தை இலவசமாக மருத்துவமனைக்காகக் கொடுத்தார். கல்வி உதவி என்று வரும் நபர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியை செய்வதற்கு சைதை துரைசாமி ஒருபோதும் தயங்கியதே இல்லை.
தரமான கல்வி கொடுக்கப்பட்டும் பெரும்பாலான மக்கள் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு தயக்கம் காட்டவே செய்கிறார்கள். இந்த தயக்கத்தை எளிதில் உடைத்து புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.