• Home
  • அரசியல்
  • சாம்சங் போராட்டத்தை உடைக்கிறதா தி.மு.க. அரசு..?

சாம்சங் போராட்டத்தை உடைக்கிறதா தி.மு.க. அரசு..?

Image

தோல்விகரமான 36வது நாள்

தி.மு.க. அரசு அடக்குவதற்கு முயற்சி செய்தும் சாம்சங் போராட்டம் இன்று தடைகளை உடைத்து 36வது நாளாகத் தொடர்கிறது. இந்த போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவும் எதிர்ப்பும் இருந்துவரும் நிலையில் காவல்துறை அத்துமீறல் தொடர்கிறது. இன்றும் கொத்து கொத்தாக தொழிலாளர் கைது. செய்யப்படுவதுடன் சங்கத்தை உடைப்பதற்கு தி.மு.க. திட்டமிடுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

இந்த நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அறிவித்திருக்கிறார்.

சாம்சங் போராட்டத்தை கைவிடும்படி தி.முக.வை சேர்ந்த தொ.மு.ச., ‘’அமைச்சர்கள் குழுவிடம் நீங்கள் தொழிற்சங்கப் பதிவு பிரச்சினை நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அந்த கோரிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டீர்கள். ஆனால் உங்கள் கோரிக்கை பட்டியலை தந்து இதன்படி நிர்வாகம் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்று கேட்கப்படவில்லையா ? இனி இந்த சங்கம் தொடர்பான பிரச்சனையை நம் மக்கள் இணையத்தில் பேசி பயனில்லை. CITU முன்பு இப்படி சொல்லிவிட்டு பின்பு போராட்டத்தை தொடர்கிறது என்றால் .. தொழிலாளர்களும் , மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்..’’ என்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டது.

ஆனால், தொமுசவின் வேண்டுகோளை புறக்கணித்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டது சிஐடியு. அதன்படி திங்கள் காலை எழிச்சூர்கிராமத்தில் போராட்ட பந்தலில் தொழிலாளர்கள் சங்கமிப்பார்கள் 16-10-2024 அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மாநிலம் தழுவியஆதரவு போராட்டம் 18-10-2024 தமிழக தலைநகர் சென்னையில் சாம்சங் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் மாநில தலைவர்கள் பங்கேற்பார்கள் 21-19-2024 காஞ்சி மாவட்டத்தில் அனைத்து சிஐடியூ தொழிற்சாலைகளிலும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நீதிமன்றத்தில் தொழிற்சங்க பதிவு வழக்கும் வர உள்ள நிலையில் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை வலுவாக கொண்டு செல்வோம் என்று சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ கிளை தலைவர் முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் CITU விற்கு அனுமதி கொடுத்தால் மட்டும் போதாது. மற்ற தொழிற்சங்கத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்கிறார்கள். சங்கங்கள் அதிகரிப்பது நிர்வாகத்திற்கு நல்லதுதான் சங்கங்கள் பெருகினால் தொழில் முடங்கும் என்பது அபத்தம் CITU ஸ்ட்ரைக் செய்தால் அண்ணா தொழிற்சங்கமும் தொமுசவும் பேருந்துகளை இயக்குவதில்லையா.. அது போல் நிறைய சங்கங்கள் உருவாகட்டும் என்றும் சொல்கிறார்கள்.

இதில் வெற்றி யாருக்கு என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Comment